India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அடுத்த பூவனூர் கிராமத்தில், பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. ரயில் எதுவும் வராததால் நல்வாய்ப்பாகப் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பூவனூர் கிராம மக்களின் உதவியுடன் வேனில் இருந்து பள்ளி மாணவர்களை மீட்டு, தண்டவாளத்தில் இருந்து வேன் அகற்றப்பட்டது.

நான் முதல்வன் – “உயர்வுக்குப் படி” வழிகாட்டி நிகழ்ச்சி முகாம் மற்றும் கல்விக்கடன் வழங்கும் முகாம் வரும் ஆக.26-ம் தேதி சிதம்பரம் வாண்டையார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் கல்விக் கடன் கோரும் மாணவர்கள் http://www.vidyalakshmi.co.in/students என்ற இணையவழி மூலமாக விண்ணப்பித்தும் உரிய ஆவணங்களுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார். SHARE IT…

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (24/08/2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் <

சட்டமன்ற பேரவை பொது கணக்குக் குழுத்தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி (போளூர்), அப்துல் சமது (மணப்பாறை), ஐயப்பன் (கடலூர்), சந்திரன் (திருத்தணி), சேகர் (பரமத்திவேலூர்), முகம்மது ஷாநவாஸ் (நாகப்பட்டினம்) ஆகியோர் ஒரு நாள் பயணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை (ஆக.,25) ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

தமிழகத்தில் செயல்படும் பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள 894 Clerk பணியிடங்கள் உட்பட இந்தியா முழுவதும் உள்ள 10,277 பணியிடங்களை நிரப்ப வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 20 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள்<

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கடலூர் மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

திராவிட முன்னேற்றக் கழக கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நாளை ஆக.25-ம் தேதி, தனது 68-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, நேற்று நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகள் பெற்றார்.

கடலூர் மாவட்டம், குடிகாடு கிராமத்திலுள்ள தனியார் தொழிற்சாலையில் இன்று (ஆகஸ்ட் 23) மதில்சுவர் சாய்ந்த சம்பவத்தில் உயிரிழந்த கம்பளி மேடு பகுதியைச் சேர்ந்த இளமதி மற்றும் இந்திரா ஆகியோர் குடும்பத்தினருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

காட்டுமன்னார்கோயில் அடுத்த வடக்கு கொளக்குடியை சேர்ந்தவர் ஜமால் உசேன் (52). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இந்நிலையில், அவரது கடைக்கு வந்த 11 வயது சிறுமிக்கு ஜமால் உசேன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து ஜமால் உசேனை இன்று (ஆகஸ்ட் 23) கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.