India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் உட்பட கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி விழுப்புரம்,, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு பெஞ்சன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வுதாரத்தை உயர்த்துவதற்காக கடலூரில் நாளை சிறு வணிக முகாம் நாளை 6.12.24 முதல் 12.12.24 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் மாணவர்களுக்கு ஒரு லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்று அமைச்சர் பெரிய கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் 129 மின்கம்பங்கள் மற்றும் மின் ஒயர்கள் சேதமடைந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை சேர்ந்த 1,843 பணியாளர்கள் மூலம் 129 மின்கம்பங்கள் நடப்பட்டும், 2802 கிலோ மீட்டர் நீளத்திற்கு மின் கம்பிகள் சீர்செய்யப்பட்டும் 154 கிராமங்களுக்கு மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் 129 மின்கம்பங்கள் மற்றும் மின் ஒயர்கள் சேதமடைந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை சேர்ந்த 1,843 பணியாளர்கள் மூலம் 129 மின்கம்பங்கள் நடப்பட்டும், 2802 கிலோ மீட்டர் நீளத்திற்கு மின் கம்பிகள் சீர்செய்யப்பட்டும் 154 கிராமங்களுக்கு மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
ஃபெஞ்சல் புயலின் காரணமாக மழைநீரால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்ட இடங்களில் 148 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், 9 குடிநீர் தொட்டிகள், 4 சிறு குடிநீர் தொட்டிகள் என 161 கிராமங்களில் உள்ள குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு தற்போது தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
ஃபெஞ்சல் புயலின் காரணமாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு 35 முகாம்களில் 19,654 நபர்கள் தங்கவைக்கப்பட்டனர். இவர்களுக்கு 15 இடங்களில் சமையல் கூடம் ஏற்படுத்தி உணவு தயாரிக்கப்பட்டு தினந்தோறும் 3 வேளை 88,650 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 10,879 நபர்களுக்கு பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது என கடலூர் கலெக்டர் தகவல் அளித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டு கடலூரில் உள்ள முகாம்களில் தங்கியுள்ள 1,600 குடும்பங்களுக்கு பாய், போர்வை, கைலி, புடவை, பிரட், பிஸ்கட், மளிகைப் பொருட்கள், அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. வெள்ள பாதிப்புள்ள பகுதியில் இதுவரை 173 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 11,555 நபர்கள் பயனடைந்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கடலூரில் வெள்ளம் பாதித்த 16 ஊராட்சிகளை சேர்ந்த 66 உட்கடை கிராமங்கள், அண்ணாகிராமத்தில் 17 ஊராட்சிகளை சேர்ந்த 57 உட்கடை கிராமங்கள், பண்ருட்டியில் 7 ஊராட்சிகளை சேர்ந்த 28 உட்கடை கிராமங்கள் என மொத்தம் 40 ஊராட்சிகளை சேர்ந்த 151 இடங்களில் 2,045 தூய்மைப் பணியாளர்கள் மூலம் 361 கிலோ பிளிச்சங் பவுடர் தெளித்து தூய்மை பணி நடந்தது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் நாளை ( 05.12.2024) வியாழக்கிழமை இயங்கும் என கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஃபெஞ்சல் புயல் /தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினை தொடர்ந்து மீட்பு நடவடிக்கையாக பண்ருட்டி, அண்ணாகிராமம் மற்றும் கடலூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ( 04.12.2024) விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.இதையடுத்து, – மழை – வெள்ளம் தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற உயர் நிலை ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் கடலூர் ஆட்சியர், அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.