India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அம்பேத்கரை, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இழிவுபடுத்தி பேசியதாக கூறி அமித்ஷாவை கண்டித்து நேற்று விருத்தாசலத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் மாவட்ட செயலாளர் நீதி வள்ளல் தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விருத்தாசலம் போலீசார் மறியலில் ஈடுபட்ட 28 பேரை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
கடலூர் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களாக ரூ.2,000, அரிசி-5 கிலோ, துவரம் பருப்பு-1 கிலோ வழங்கப்படும் நிலையில், கூடுதல் நிவாரணமாக சர்க்கரை-1 கிலோ கடலூர், பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டங்களில் உள்ள 310 நியாயவிலை கடைகளில் உள்ள 1,95,983 குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்தார்.
சேத்தியாத்தோப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் 17 வயது மாணவி தற்போது சென்னையில் படித்து வருகிறார். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது. பெற்றோர் விசாரித்த போது, கடந்த ஆண்டு வேதியல் ஆசிரியர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சேத்தியாத்தோப்பு மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து, ஆசிரியரை நேற்று கைது செய்தனர்.
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிச.20 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 15க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வுசெய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்கவுள்ளது. எனவே 10 மற்றும் 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுக்குழு அதன் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பரங்கிபேட்டை வட்டார தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்பொதுக்குழு கூட்டத்தில் வாடகை மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்திட வரும் மார்ச் மாதம் தலைநகர் டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உட்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடலூர் மாவட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான திருக்குறள் வினாடி-வினா முதல்நிலைப் போட்டி தேர்வு 21.12.2024 அன்று கடலூர், திருப்பாதிரிப்புலியூரில் உள்ள புனித வளனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதற்கு tnpscm2cuddalore@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாதிப்புக்கு உள்ளான கால்நடைகளுக்கு தீவனப்புல் வேண்டும் என்று அரசுக்கு எம்.எல்.ஏ. சிந்தனை செல்வன் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து எம்.எல்.ஏ. கோரிக்கையை ஏற்று உடனடியாக கால்நடை துறை சார்பாக நாலரை டன் (4½) தீவன புல் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டது. முதற்கட்டமாக திருநாரையூர், வீரநத்தம், சர்வராஜன்பேட்டை ஆகிய கிராமங்களுக்கு தீவன புல் விநியோகம் துவங்கியது.
கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் கருவிகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இதனால் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் கார்டு நகல், வங்கி புத்தகம் நகல், புகைப்படம், சிறு குறு விவசாய சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் கடலூர், சிதம்பரம், விருத்தாசலத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்திடவும், சேதம் அடைந்த வீடுகளைக் கண்டறிந்து கணக்கெடுத்து உரிய நிவாரணம் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட மக்கள் உங்கள் பான் கார்ட்-ஐ புதுபிப்பதாக கூறி சைபர் குற்றவாளிகள் தொலைபேசி மூலம் அழைத்து ஓ.டி.பி-யை (OTP-யை) கேட்டால் கொடுக்க வேண்டாம் எனவும், நீங்கள் புதிய பான் கார்டுக்கு விண்ணப்பித்திருந்தால் உங்கள் முகவரிக்கு அரசு நேரடியாக அனுப்பும் எனவும் கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.