India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவைபுரிந்த ஒருவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சர்வதேச மகளிர் தினம் அன்று ஒளவையார் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது பெற தகுதிவாய்ந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் 31.12.2024-க்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கலை மற்றும் கைவினை தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் கொண்டு தொழில்புரிய ரூ. 3 இலட்சம் வரை பிணையமில்லாமல் மானியத்துடன் கூடிய கடனுதவி வங்கிகள் மூலம் வழங்கப்படும். இதில் பயன்பெற விரும்புவோர் ‘www.msmeonline.in.gov.in’ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
செம்மங்குப்பம், கடலூர் துணை மின் நிலையங்களில் நாளை (டிச 26) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், செம்மங்குப்பம், வீரன்சாவடி, பெரியக்குப்பம், ஆலப்பாக்கம், தானூர், கருவேப்பம்பாடி, பிள்ளையார்மேடு, கண்ணாரப்பேட்டை, சம்பா ரெட்டிப்பாளையம், பூண்டியாங்குப்பம், சித்திரைபேட்டை, அய்யம்பேட்டை, பள்ளிநீர் ஓடை பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் பணியிடங்களை நிரப்ப கோரி பட்டதாரி ஆசிரியர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தனியார் நிறுவன பள்ளியில் கூட எங்களுக்கு வேலை தர மறுக்கிறார்கள் என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
பண்ருட்டி கொஞ்சிக்குப்பத்தை சேர்ந்தவர் சக்திகிருஷ்ணன். இவர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை பற்றி தவறான தகவல்களையும், ஆபாசமான செய்திகளையும் முகநூல் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தம்பி காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சக்திகிருஷ்ணன் மீது இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
காடாம்புலியூர் அடுத்த சின்னப்புறங்கனியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பிருத்விராஜ், நேற்று தனது மனைவி பிரியங்கா மற்றும் குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தனக்கு அரசு வேலை வழங்க கோரி டீசலை ஊற்றி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த புதுநகர் போலீசார் பிருத்விராஜ், அவரது மனைவி மற்றும் குழந்தையை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 26-ம் தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், மக்களின் தேவைகள் குறித்து கள ஆய்வு மற்றும் அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேலும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார்.
வேப்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அடுத்த ஆண்டிற்கான தொழிற் பயிற்சியாளர் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. இதில் உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு ஆட்டோமேஷன், மின்னணுவியல் தொழிற்நுட்ப வல்லுநர், குழாய் செப்பணிடுபவர் ஆகிய தொழிற் பயிற்சிகளுக்கு 10 மற்றும் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் வரும் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நாளை (டிசம்பர் 23) கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது. இதற்கு மாவட்ட எஸ்.பி. ராஜாராம் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைக்க உள்ளார். இதில் டி.எஸ்.பி.க்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
வேப்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆண்டிற்கான தொழிற் பயிற்சியாளர் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. இதில் உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு ஆட்டோமேஷன், மின்னணுவியல் தொழிற்நுட்ப வல்லுநர், குழாய் செப்பணிடுபவர் ஆகிய தொழிற் பயிற்சிகளுக்கு 10 மற்றும் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் வரும் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.