Cuddalore

News December 27, 2024

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் கொடுவா மீன்வளர்ப்பு பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, ரேவு மெயின் ரோடு, கடல்வாழ் உயிரியல் அண்ணாமைலை பல்கலைகழகம் எதிரில், பரங்கிப்பேட்டை-608502 என்ற முகவரியில் 10.01.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News December 27, 2024

அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு: ஆட்சியர் அறிவிப்பு

image

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இரவு மரணம் அடைந்தார். இந்த நிலையில் அவரது மறைவையொட்டி இன்று நடக்க இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் இன்று (27.12.2024) நடைபெற இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News December 27, 2024

சிறுமியிடம் அத்துமீறல்-  இளைஞர் மீது வழக்கு

image

பண்ருட்டி அடுத்த ஏ.ஆண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (30). இவர் பண்ருட்டி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், பண்ருட்டி ஊர் நல அலுவலர் மோகன், பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கோவிந்தராஜ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

News December 27, 2024

கடலூர்: பைக் மோதி ஆசிரியர் உயிரிழப்பு

image

கம்மாபுரம் அடுத்த பெருந்துறையை சேர்ந்தவர் தனபால்(58). விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்த இவர் நேற்று தனது பைக்கில் சு.கீணனூர் அருகே சென்றபோது எதிரே வந்த பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 26, 2024

பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து தங்கள் பகுதிக்கு வரும் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும், காய்ச்சல் ஏற்படாவண்ணம் சுடுதண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும், மழைக்காலம் என்பதால் குளோரின் கலந்த குடிநீரை பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News December 26, 2024

குமராட்சி: மனைவி மீது தாக்குதல் கணவன் கைது

image

குமராட்சியில், கணவன் மனையிடையே ஏற்பட்ட தகராறில், கோபித்துக் கொண்டு, குமராட்சி அடுத்த மேல்தவர்த்தம்பட்டில் உள்ள தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்து சத்யா தங்கினார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வெற்றிச்செல்வன், போதையில் மாமனார் வீட்டிற்கு வந்து, மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.குடும்பம் நடத்த வர மறுத்ததால், மனைவியை தாக்கினார் இது குறித்த புகாரில் கணவரை போலீசார் கைது செய்தனர்.

News December 26, 2024

11 மாதங்களில் 4,914 குழந்தைகள் பிறப்பு

image

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கும் வசதிகள் உள்ளன. இந்த பிரிவில் 6 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு, கடந்த 11 மாதங்களில் 2,496 ஆண் மற்றும் 2,418 பெண் குழந்தைகள் என மொத்தம் 4,914 குழந்தைகள் பிறந்துள்ளதாக மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், அதிகபட்சமாக அக்டோபர் மாதத்தில் 627 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவித்தார்.

News December 25, 2024

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் 167 காலிப்பணியிடங்கள்

image

நெய்வேலியில் அமைந்துள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 167 பட்டதாரி பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சம்பளம், வயது வரம்பை இந்த இணையதளத்தில் <>LINK <<>>தெரிந்துகொள்ளலாம். மேலும் கேட் 2024 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு தகுதியானவர்களிடம் வரும் 2025 ஜனவரி 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News December 25, 2024

காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ கிறிஸ்துமஸ் வாழ்த்து 

image

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்., சகோதரத்துவம் தழைக்க உறுதி ஏற்போம்” என்று தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News December 25, 2024

வீராணம் ஏரியின் நீர்மட்டம் நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது வீராணம் ஏரி. லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இன்றைய (டிச 25) நிலவரப்படி ஏரியில் 47.15 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. வினாடிக்கு 1104 கன அடி தண்ணீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 119 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் சென்னைக்கு குடிநீர் தேவைக்காக 74 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

error: Content is protected !!