India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிதம்பரம் அடுத்த கீழ்செங்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் தேவி (19). இவருக்கு திருமணமாகி 1 வருடம் ஆகிறது. இந்நிலையில், தேவி அதே பகுதியில் உள்ள தனது அண்ணன் தேசிங்குராஜன் வீட்டில் படுத்திருந்த போது, விஷ பூச்சி கடித்துள்ளது. பின்னர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தேவி, நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ரெட்டிச்சாவடி அடுத்த கீழ்குமாரமங்கலத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (36). குடிப்பழக்கம் உடைய இவர், மதுகுடிக்க தனது மனைவி சிவமதியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த ஆனந்தராஜ் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் இன்று (செப்.13) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கடலூர் மாவட்ட காவல் அலுவலர்களுக்கு எஸ்பி அறிவுரை வழங்கினார்.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், இன்று (செப்.13) காலை நிலவரப்படி கடலூரில் 37.4 மி.மீ, பண்ருட்டி 34 மி.மீ, சிதம்பரம் 21 மி.மீ, புவனகிரி 15 மி.மீ, விருத்தாசலம் 10 மி.மீ, சேத்தியாத்தோப்பு 7 மி.மீ, பரங்கிப்பேட்டை 6 மி.மீ மற்றும் காட்டுமன்னார்கோவிலில் 2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

கடலூர் மக்களே.. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Engineer/ Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள்<

கடலூர் மாவட்ட தேசிய நல்வாழ்வு குழுமத்தின் கீழ் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலியாக உள்ள 9 பணியிடங்கள் தற்காலிமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு சம்பளமாக ரூ.15,000 வழங்கப்படும். இதற்கு டிப்ளமோ பார்மசி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். <

கடலூர் மக்களே, ஜூலை.1 முதல் உணவுப் பாதுகாப்பு புகார்களுக்கான வாட்ஸ்அப் எண் (9444042322) தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் உணவின் தரம், கலப்படம் குறித்த புகார்களை, அந்த எண்ணிற்கு பதிலாக ‘TN Food Safety Consumer App’ மூலம் தெரிவிக்கலாம் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும் அறிய கடலூர் மாவட்ட உணவுப்பாதுகாப்புத் துறை அலுவலகத்தை அணுகலாம். SHARE பண்ணுங்க!

நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டீஸ்வரம் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் சக்திவேல் (63). இவர் அதே பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரிடம் கடந்த ஆண்டு தீபாவளி சீட்டு நடத்துவதாக கூறி ரூ.47 லட்சம் பெற்றுக் கொண்டார். பின்னர் அவர்களுக்கு தீபாவளி சீட்டு கொடுக்காமல் மோசடி செய்து விட்டார். இது குறித்து கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து சக்திவேலை நேற்று கைது செய்தனர்.

ஜெர்மனி நாட்டில் வேலைவாய்ப்பை பெறும் வகையில், ஜெர்மன் மொழி தேர்விற்கான இலவச பயிற்சி தாட்கோ சார்பில் அளிக்கப்படுகிறது. இதற்கு Nursing / B.E / B.Tech முடித்த, 35 வயதுக்கு உட்பட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின வகுப்புகளை சேர்ந்த நபர்கள், <

குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் எஸ்.ஐ.ஆக பணிபுரிந்தவர் பாலசுந்தரம். இவர் கடந்த 7.3.2023 அன்று குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ஐயப்பன் என்பவரிடம் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் மீது நடத்தப்பட்ட துறை ரீதியிலான விசாரணையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நேற்று அவரை பணிநீக்கம் செய்து கடலூர் எஸ்.பி உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.