Cuddalore

News January 13, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட முன்னாள் படைவீரர், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினருக்கென சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 24ஆம் தேதி மாலை 4 மணிக்கு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News January 13, 2025

கூடுதல் பாதுகாப்புடன் ஆற்றுத் திருவிழா நடத்தப்படும்- ஆட்சியர்

image

கடலூரில் பாரம்பரியமாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் தென்பெண்ணை ஆற்றுத் திருவிழா இந்த ஆண்டும் வழக்கம் போல் வருகிற 18ஆம் தேதி நடத்தப்படும். தென்பெண்ணையாற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால், விழாவுக்கு வரும் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் விழா நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News January 13, 2025

கடலூர் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்

image

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை செல்வோருக்கு வசதியாக சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் ராமநாதபுரத்தில் இருந்து, 19ஆம் தேதி மாலை 3:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு சென்னை, தாம்பரம் சென்றடையும். மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, சிதம்பரம், கடலூர் போர்ட், விழுப்புரம் வழியாக இந்த ரயில் செல்கிறது. இந்த சிறப்பு ரயிலில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.

News January 12, 2025

கடலூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

image

சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற நடராஜர் கோயிலில் நாளை (ஜனவரி 13) ஆருத்ரா தரிசனம் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார். இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் நாளை செயல்படாது.

News January 12, 2025

விவசாயிகள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

image

நெல் கொள்முதலில் ஏற்படும் புகார்களை விவசாயிகள் தெரிவிக்க தொலைபேசி எண்ணை கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார். அதன்படி 04142-220700 என்ற எண்ணில் நெல் கொள்முதலில் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து, விவசாயிகள் கடலூர் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 12, 2025

வேலையில்லா இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

image

கடலூர் மாவட்ட ஆட்சியரின் செய்திக்குறிப்பில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். 10ஆம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சி (அ) அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்தவர்கள், பிப்.28ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்தில் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News January 12, 2025

கனக சபையில் தரிசனம் செய்ய போலீசார் பாதுகாப்பு

image

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று மாலை தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் கனக சபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்வதற்காக காவல்துறையிடம் பாதுகாப்பு கோரியிருந்தனர். அதன் அடிப்படையில் சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் தலைமையில் போலீசார் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய பாதுகாப்பு அளித்தனர். சுவாமி தரிசனம் செய்ய பாதுகாப்பு அளித்த காவல்துறைக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

News January 11, 2025

சிறுவர்- சிறுமிகளுக்கான பாரம்பரிய உடை போட்டி

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் கலைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அதன்படி பாரம்பரிய உடை போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள 1 முதல் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்- சிறுமிகள் பாரம்பரிய உடை அணிந்த புகைபடங்களை படத்தில் உள்ள கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்து வருகிற 20-ஆம் தேதிக்குள் அனுப்பி வைத்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்

News January 11, 2025

2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்க தடை – ஆட்சியர்

image

கடலூர் மாவட்டத்தில் திருவள்ளுவர் தினம் (15.01.2025) மற்றும் குடியரசு தினம் (26.01.2025) ஆகிய இரண்டு நாட்களுக்கு, கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மதுபானக் கடைகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கூடங்கள்இயங்க தடை விதிக்கப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News January 11, 2025

ரத்தப்பட்டு ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம்

image

கடலூர் மாவட்டம், ரத்தப்பட்டு ஊராட்சியில் தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு இன்று (ஜன.11) ஊராட்சி மன்ற செயலாளர் சரவணன் தலைமையில், 100 நாள் வேலை பணியாளர்கள் அனைவரும் ஓரே சீருடையில் சமத்துவப் பொங்கல் விழாவை வெகு விமர்சையாக கொண்டாடினர். இந்நிகழ்வில் பணித்தள பொறுப்பாளர் கௌசல்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

error: Content is protected !!