Cuddalore

News January 21, 2025

போட்டி தேர்வுக்கு வகுப்புகள் நடத்த திட்டம்-ஆட்சியர்

image

கடலூர் மாவட்டத்தில் எதிர்வரும் கல்வியாண்டில் விடுதி மாணாக்கர்களுக்கு வாரத்தின் 5 நாட்களிலும் மாலை நேரங்களில் Social Lab மூலம் கலை, அறிவியல், ஆங்கில பயிற்சி (Spoken English) உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் போட்டித்தேர்வுகள் குறித்த வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News January 21, 2025

கடலூர்: குடியரசு தினத்துக்கு சிறப்பு பேருந்து

image

குடியரசு தின விழாவை முன்னிட்டு கடலூர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து, விழா நடக்கும் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு சிறப்பு பேருந்துகளை ஜன.26 அன்று காலை 6.30 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை கடலூர் போக்குவரத்து துறை அதிகாரிகள் இயக்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News January 21, 2025

கடலூர்: இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்- ஆட்சியர்

image

காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 5.2.2025 முதல் 15.2.2025 வரை இராணுவ ஆட்சேர்ப்பு பேரணி நடைபெற உள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் www.joinindianarmy.nic என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் முழுமையான ஆவணங்கள் இன்றி வந்தால் பேரணியில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News January 21, 2025

நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம்-ஆட்சியர்

image

கடலூர் மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டுக்கு சம்பா நெற்பயிர்களை அறுவடை செய்ய, பெல்ட் வகை தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு மணி ஒன்றுக்கு வாடகையாக ரூ.2500/- எனவும், டயர் வகை தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு மணி ஒன்றுக்கு வாடகையாக ரூ.1800/- எனவும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்தார்.

News January 21, 2025

கடலூரில் 683 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

image

குடியரசு தின விழா வருகிற 26 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 கிராமங்களிலும், கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டும். மேலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் இடம், நேரம் குறித்து முன்கூட்டியே பொது மக்களுக்கு அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் அறிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News January 21, 2025

கடலூர் மாவட்டத்தில் இன்று மின்தடை

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.21) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் சேத்தியாத்தோப்பு, பின்னலூர், ஒரத்தூர், கீழாக்குப்பம், கீழக்கொள்ளை, வளையமாதேவி, எறும்பூர், வடலூர், கங்கைகொண்டான், சோழதரம், குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

News January 20, 2025

கடலூரில் வேலைவாய்ப்பு முகாம்

image

கடலூர் மாவட்டத்தில் மகளிர் திட்டம் மூலம் வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் 25.01.2025 அன்று வடலூர், வள்ளலார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் கலந்துகொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News January 20, 2025

காட்டுமன்னார்கோவில்: 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

காட்டுமன்னார்கோயில் அருகே காங்கிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர் அலி. தொழிலாளியான இவர், 5 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில்  காட்டுமன்னார்கோயில் போலீசார் நேற்று (ஜன.19) மன்சூர் அலியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். 

News January 19, 2025

பொங்கல் தொகுப்பு வாங்க 25ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

image

கடலூர் மாவட்டத்தில், பொங்கல் தொகுப்பு வாங்குவதற்கான தமிழக அமைச்சர் பெரியகருப்பண்ணன் 25 ஆம் தேதி வரை நீட்டிப்பு என்று தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசாங்கம் ஜனவரி மாதம் 9ம் தேதி முதல் 13ம் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. இன்னும் வாங்காதவர்கள் வரும் 25 ஆம் தேதி வரை வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 18, 2025

கடலூர் மாவட்டத்தில் மின் நிறுத்தம் ரத்து

image

கடலூர் மாவட்டத்தில் இன்று செம்மண்டலம், செம்மங்குப்பம், முட்டூர், விருத்தாச்சலம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று நடைபெறுவதாக இருந்த ஒட்டு மொத்த மின் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!