India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் பூக்கடைக்காரர் அரவிந்த் (28). இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள சுடுகாடு அருகில் நடந்து சென்றபோது மர்மநபர் ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டார். இதுபற்றி அறிந்த டி.எஸ்.பி. ரூபன் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அரவிந்த் உடலை கைப்பற்றி, அவரை கொலை செய்த மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு கடலூர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து, விழா நடக்கும் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு சிறப்பு பேருந்துகளை இன்று (ஜன.26) காலை 6.30 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை கடலூர் போக்குவரத்து துறை அதிகாரிகள் இயக்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
குடியரசு தின விழா நாளை (ஜனவரி 26 ஆம் தேதி) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 கிராமங்களிலும், கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டும். மேலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் இடம், நேரம் குறித்து முன்கூட்டியே பொது மக்களுக்கு அந்தந்த ஊராட்சி செயலாளர்கள் அறிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், 12 இடங்களில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகள் முறைகேடு காரணமாக அமலாக்கத்துறை வழக்கில் சிக்கி மூடப்பட்டன. இதனால் கட்டுமானத்துறை, லாரி உரிமையாளர்கள் தரப்பினர் உள்ளிட்டோர் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு தவித்து வருகின்றனர். இதையடுத்து அரசு சார்பில், 13 மாவட்டங்களில் புதிதாக மணல் குவாரிகள் திறக்க பணிகள் நடந்து வருகின்றன. அதில் கடலூர் மாவட்டத்திலும் புதிய மணல் குவாரி விரைவில் அமைய உள்ளது.
புதுச்சத்திரம் அருகே 16 வயது மாணவி அரசு பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அப்போது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. புதுச்சத்திரம் போலீசார் பள்ளி மாணவியிடம் விசாரணை செய்து, கர்ப்பத்திற்கு காரணமான ஆண்டாள் முள்ளிப் பள்ளத்தை சேர்ந்த பவித்ரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் வில்வராயநத்தத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட வீடுகளை, விற்பனை கிரைய ஆவணத்தின் மூலம் பெற்ற வீட்டின் உரிமையாளர்களுக்கு பட்டா வழங்க இன்று (25.01.2025) காலை 10 மணிக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள விநாயகர் கோயில் வளாகத்தில் பட்டா மாறுதல் விண்ணப்பம் பெறும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கடலூர் மாநகராட்சியும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமும் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்புடன் நெகிழி பயன்பாட்டை தவிர்த்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாபெரும் நெகிழி சேகரிப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் இன்று (25.01.2025) காலை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் ஆன்லைன் வழியாக 2,583 சைபர் குற்ற புகார்கள் வந்துள்ளது. அதில் 208 வழக்குகள் பதிவு செய்து, 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.14.67 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ரூ.10.18 கோடி வங்கிகளில் முடக்கப்பட்டு, அதில் ரூ.73,29,307 திரும்ப பெற்று புகார் தாரர்களுக்கு திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது என கடலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.
நெல் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் நெல் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்ய இன்று (24.01.2025) கடலூர் வருகை புரிய உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கூடுதலாக பணியாற்றிட பாதுகாப்பு அலுவலர் பணிக்கும், சமூகப்பணியாளர் பணிக்கு 2 காலியிடங்கள் நிரப்படவுள்ளன. ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவம் மற்றும் இதர விவரங்கள் கடலூர் மாவட்ட இணையதள முகவரி www.cuddalore.tn.nic.in-ல் கொடுக்கப்பட்டுள்ளதாக கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார். SHARE NOW!
Sorry, no posts matched your criteria.