Cuddalore

News September 20, 2025

கடலூர்: தப்பிக்க முயன்ற இளைஞருக்கு மாவுகட்டு

image

முத்தாண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் அரசு என்ற வீரபுகழ் (18). நடுவீரப்பட்டு அருகே பேர்பெரியாங்குப்பத்தை சேர்ந்த அசோக்குமார் (26) என்பவரை கடத்திய வழக்கு தொடர்பாக நேற்று புத்திரன்குப்பம் செம்மண் குவாரி அருகே பதுங்கி இருந்த வீரபுகழை நடுவீரப்பட்டு போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது போலீசில் இருந்து தப்பிக்க ஓடிய போது தவறி விழுந்ததில் வீரப்புகழுக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

News September 20, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று(செப்.19) இரவு 10 மணி முதல் இன்று (செப்.20) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 19, 2025

கடலூரில் பெற்றோர்கள் கவனத்திற்கு… இது முக்கியம்!

image

கடலூர் மக்களே.. உங்கள் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் பள்ளி முதல் ஆதார், பாஸ்போர்ட் பெறுவதற்கு மிக முக்கியமானதாகும். பிறப்பு சான்றிதழ் பெற இனி அலைச்சல் வேண்டாம். புதிய சான்றிதழ் பெறுவதற்கும், தொலைந்த சான்றிதழ் பெறுவதற்கும் இங்கே <>க்ளிக் <<>>செய்து சுலபமாக பெற முடியும். மேலும் உங்கள் பகுதி பிறப்பு பதிவாளர், சுகாதார ஆய்வாளர் ஆகியோரை அணுகியும் பெற முடியும். இதனை LIKE மற்றும் SHARE பண்ணுங்க.

News September 19, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

image

கடலூர் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்று உள்ள நலன்காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் 7,000-க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளிகள் கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இம்முகாம்களில் மேல்சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படும் பொதுமக்களுக்கு தலைமை மருத்துவமனைகளில் உயர்சிகிச்சை வழங்கி பொதுமக்களின் நலனை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News September 19, 2025

கடலூர்: எச்.ஐ.வி. நோய் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

image

கடலூர் டவுன்ஹால் அருகே எச்.ஐ.வி /எய்ட்ஸ் பால்வினை நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தலைமையில் இன்று விழிப்புணர்வு உறுதி மொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். உடன் இணை இயக்குநர் (நலப்பணிகள்) மணிமேகலை, துணை இயக்குநர் (காசநோய்) கருணாகரன் உள்பட பலர் உள்ளனர்.

News September 19, 2025

வடலூர்: கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கல்

image

கடலூர் மாவட்டம், வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 16 மற்றும் 17 ஆகிய வார்டு பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் வடலூர் தனியார் மண்டபத்தில் இன்று காலை துவங்கியது. முகாமை மாவட்ட கல்வி குழு தலைவர் பொறியாளர் வி. சிவக்குமார் துவக்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும், மக்களை தேடி மருத்துவ பயனாளிகளுக்கு மருந்து பெட்டகமும் வழங்கினார்.

News September 19, 2025

கடலூர்: வைரஸ் காய்ச்சல், முக்கிய தகவல்!

image

கடலூர் மக்களே, தற்போது தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சளி, இருமல் மற்றும் வைரஸ் காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் உங்களுக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால், உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சளுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து உங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை SHARE செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

News September 19, 2025

கடலூர்: 10th போதும்; ஏர்போர்ட்டில் வேலை

image

இந்திரா காந்தி சர்வதேச விமானப் சேவைகள் (IGI Aviation Services) நிறுவனத்தில் காலியாக உள்ள ‘1446’ Airport Ground Staff மற்றும் Loaders பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10 & 12-ம் வகுப்பு முடித்த, 18-30 வயதுக்குட்பட்ட நபர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து, வரும் செப்.21-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். SHARE NOW!

News September 19, 2025

கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

image

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் இன்று (செப்.19) காலை 8.30 மணி நிலவரப்படி, கடலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக வானமாதேவியில் 131.6 மி.மீ, பண்ருட்டியில் 130 மி.மீ, ஸ்ரீமுஷ்ணத்தில் 11.1 மி.மீ, விருத்தாச்சலத்தில் 7.2 மி.மீ, குறிஞ்சிப்பாடி 22 மி.மீ, காட்டுமன்னார்கோவில் 14.2 மி.மீ, கடலூர் 27.7 மி.மீ, தொழுதூரில் 5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

News September 19, 2025

கடலூர்: இலவச ஓட்டுநர் பயிற்சி

image

கடலூர் இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் இலவச இலகுரக வாகன (Light Motor Vehicle – LMV) ஓட்டுநர் பயிற்சி 30 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் இன்று (செப்.19) முதல் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான நேர்காணல் செப்.25-ம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 04142-796183 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!