Cuddalore

News September 25, 2025

கடலூரில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அறிவிப்பு

image

கடலுார் எம்.ஜி.ஆர் கூட் டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர தங்க நகை மதிப்பீடு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து இணைப்பதிவாளர் இளஞ்செல்வி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தங்க நகை பற்றிய விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முடித்த பின்னர் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தங்க நகை மதிப்பீட்டாளராக பணியாற்றலாம். மேலும் தகவலுக்கு 04142-222619, 9600906017 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News September 25, 2025

கடலூர்: சிறப்பு கடன் முகாம் அறிவிப்பு

image

கடலூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பிரதம மந்திரியின் சாலையோர வியாபாரிகளுக்கான ஆத்ம நிருபா நிதி திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்பட்ட கடன் கட்டமைப்பில் கடன் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக கடன் வழங்கும் சிறப்பு முகாம் ஏற்கனவே தொடங்கி நடக்கிறது. இந்த முகாம் 2.10.2025 அன்று வரை கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடக்கிறது என ஆணையாளர் முஜிபுர்ரகுமான் தெரிவித்துள்ளார்.

News September 25, 2025

கடலூர்: ஒருதலை காதல்; 17 வயது சிறுவன் கைது

image

நெய்வேலி அடுத்த ஆயிப்பேட்டையை சேர்ந்தவர் பூமதி. இவரது மகள் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயதான டிப்ளமோ படிக்கும் மாணவர் ஒருவர் மாணவியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துளார். இதுகுறித்து பூமதி மாணவனிடம் கேட்டபோது, அவர் பூமதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் நெய்வேலி போலீசார் 17 வயது மாணவனை கைது செய்தனர்.

News September 25, 2025

கடலூர்: B.E / B.Tech படித்தவர்களுக்கு அற்புத வாய்ப்பு

image

மத்திய அரசின் BEL நிறுவனத்தில் உள்ள 610 Trainee Engineer காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/ B.Tech முடித்த 21-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த<> LINK-ஐ<<>> கிளிக் செய்து, வரும் அக்.07-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். B.E முடித்துவிட்டு வேலை தேடும் FRESHER-களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

News September 25, 2025

20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு: கடலூா் ஆட்சியா் தகவல்

image

பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு கடலூர் அருகே சிங்காரத்தோப்பு, அக்கரைக்கோரியில் நாவல் மரக்கன்று நடும் நேற்று விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்வை தொடங்கி வைத்தார். அப்போது கடலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயித்து உள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.

News September 25, 2025

கடலூர்: இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

image

ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் தேவநாதன் (33). இவர், ஒரு வீட்டில் புகுந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த 21 வயதுடைய இளம்பெண்னுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் திடுக்கிட்டு எழுந்த அப்பெண், கூச்சலிட முயன்றுள்ளார். அப்போது தேவநாதன், பெண்ணின் வாயை கையால் பொத்தி, இதை யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் தேவநாதனை கைது செய்தனர்.

News September 25, 2025

கடலூர்: மின்சாரம் தாக்கி பரிதாப பலி

image

கடலூர் மாவட்டம் தொண்டமாநத்தம் பஞ்சாயத்து நாகம்மாள் பேட்டையை சேர்ந்தவர் கருணாகரன். இவர் இன்று (செப் 24) தனக்கு சொந்தமான 4 மாடுகளை மேய்ச்சலுக்காக அதே பகுதியில் உள்ள வயலுக்கு ஓட்டிச் சென்றார். அப்போது வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியில் எதிர்பாராதவிதமாக மாடுகள் மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகின. இதுகுறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News September 25, 2025

கடலூர் வரும் விஜய்; பயணத்தில் திடீர் மாற்றம்!

image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடலூரில் நவம்பர் 22-ம் தேதி பரப்புரை பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், அக்டோபர் 11-ம் தேதிக்கு பரப்புரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அனறு கடலூர் தலைமை தபால் நிலையம், உழவர் சந்தை ஆகிய இடங்களில் பரப்புரைக்கு அனுமதி கேட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தவெக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. SHARE NOW !

News September 24, 2025

கடலூர் மக்களே உஷார்; மழைக்கு வாய்ப்பு!

image

கடலூர் மக்களே இன்று (செப்.24) இரவு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது வருகிறது. மேலும், இன்று இரவு தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் சற்று எச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடை முக்கியம் மக்களே…!

News September 24, 2025

பாலம் கட்டும் பணி; தொடங்கி வைத்த அமைச்சர்!

image

கடலூர் மாவட்டம் ஓட்டேரி-பில்லாலி இடையே ரூ.16.75 கோடி மதிப்பீட்டில் கெடிலம் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டுமானப் பணிக்கு இன்று(செப்.24) அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அடிக்கால் நாட்டினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் பிரியங்கா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கற்றனர்.

error: Content is protected !!