Cuddalore

News February 18, 2025

மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆய்வக உதவியாளர் சஸ்பெண்ட்

image

சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் அரசு கலைக் கல்லூரி மாணவி ஒருவருக்கு, அதே கல்லூரியில் ஆய்வக உதவியாளராக பணிபுரியும்  சிதம்பரநாதன் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி சிதம்பரம் மகளிர் போலீசில் அளித்த புகாரில், போலீசார் சிதம்பரநாதனை கைது செய்தனர். நேற்று சென்னை கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவள்ளி, இதுதொடர்பாக விசாரணை செய்து, சிதம்பரநாதனை சஸ்பெண்ட் செய்தார்.

News February 17, 2025

வழி தெரியாமல் கடற்கரைக்கு சென்ற குழந்தை மீட்பு

image

தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு பவஸ்ரீ என்ற குழந்தை வழி தெரியாமல் வந்துவிட்டது. தந்தை பெயர் வல்லராஜ் என்று தெரிகிறது. இந்த நிலையில் குழந்தை பவஸ்ரீ தற்போது கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் குழந்தை உள்ளது. குழந்தையின் பெற்றோர் உடனடியாக வந்து குழந்தையை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக உதவி ஆய்வாளர் பிரசன்னாவை 9941408190 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News February 17, 2025

குழந்தைகள் கல்வியில் மேன்மையடைய திருவந்திபுரம் செல்லுங்கள்.

image

திருவந்திபுரம் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோவில், தென்னிந்தியாவில் ஹயக்ரீவருக்கான ஒரே புராதான கோவிலாக கருதப்படுகிறது. ஹயக்ரீவர், கல்வி மற்றும் ஞானத்தின் கடவுளாக போற்றப்படுகிறார். இக்கோவில் 1500 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். குழந்தைகள் கல்வியில் சிறக்க இங்கு வந்து தரிசிப்பது சிறப்பு.

News February 17, 2025

எஸ்பி தலைமையில் பாதுகாப்பு முன்னேற்பாடு கூட்டம்

image

தமிழக முதல்வர் அரசு விழா பாதுகாப்பு முன்னேற்பாடு கலந்தாய்வு கூட்டம் கடலூர் மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஐ.பி.எஸ், முதலமைச்சரின் பாதுகாப்பு காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் ஆகியோர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கோடீஸ்வரன், நல்லதுரை மற்றும் அனைத்து துறை சார்ந்த உயர் அதிகாரிகள் இருந்தனர்.

News February 17, 2025

பண்ருட்டி எம்எல்ஏ இன்று காலை அறிக்கை வெளியீடு

image

பண்ருட்டி எம்எல்ஏ மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலும், வளங்களையும் கொள்ளையடித்து பல இலட்சம் கோடிகளை வாரி சுருட்டிச் சென்று விட்டு, தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாது என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மனச்சான்று இல்லாமல் பேசுவது கடும் கண்டனத்துக்குரியது” என்று தெரிவித்துள்ளார்.

News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில்(BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லர், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளன. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். SHARE NOW

News February 16, 2025

துப்பாக்கி சூடும் போட்டியில் முதலிடம் பிடித்த கடலூர் மாணவர்

image

ஹரியானாவில் நடைபெற்ற அகில இந்திய தேசிய பாதுகாப்பு படை முகாமில் 20 மாநிலங்களில் இருந்து 257 கமாண்டோ படை வீரர்கள் கலந்து கொண்டு 45 நாட்கள் பயிற்சியினை மேற்கொண்டனர், இப்பயிற்சியின் இறுதியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மல்யுத்த மாணவர் மற்றும் தமிழ்நாடு கமாண்டோ படை வீரர் அஜித் முதலிடம் பிடித்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

News February 16, 2025

கடலூர்: 30 நாட்களுக்குள் வரி செலுத்தினால் ரூ.5000 ஊக்கத்தொகை

image

கடலூர் மாநகராட்சிக்கு ரூ.28.95 கோடி வரி பாக்கி உள்ளது. மேலும் 30 நாட்களுக்குள் வரி செலுத்தினால் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் அனு தெரிவித்துள்ளார். சொத்து உரிமையாளா்கள் தங்களது 2023-24 ஆம் ஆண்டுக்கான முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை வரும் முதல் 30 நாட்களுக்குள் செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

News February 15, 2025

சோழர் கால பொக்கிஷம் விருத்தகிரீஸ்வரர் கோயில்

image

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் அமைந்துள்ள விருத்தகிரீஸ்வரர் கோயில் சோழ ராணி செம்பியன் மகாதேவியால் காவிரி நதிக்கரையில் கட்டப்பட்ட கோயில்களில் ஒன்றாகும். இந்த கோயிலில் சோழர் காலத்தைச் சேர்ந்த பல கல்வெட்டுகள் உள்ளன. இந்த கோயில் விருத்தாச்சலம் நகரத்திற்கு அதன் பெயரைக் கொடுக்கிறது. இந்த கோயிலில் வரும் மார்ச் மாதம் 12ஆம் தேதி மாசி மகம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது

News February 15, 2025

வேளாண் அடுக்ககம் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு

image

கடலூர் மாவட்ட விவசாயிகள் வேளாண் அடுக்ககம் திட்டத்தில் நில விபரங்களை பதிவு செய்யுமாறு வேளாண் அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். விவசாயிகளின் ஆவணங்களை பெற்று அடையாள எண் வழங்கப்படும். அதன் அடிப்படையில் அரசின் திட்டங்கள் சரியான பயனாளிக்கு சென்றடைவது உறுதிப்படுத்த முடியும். எனவேஅந்தந்த பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் நில ஆவணங்களை வேளாண் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

error: Content is protected !!