India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆதிதிராவிடர் நலக்குழு, மனித கழிவுகளை அகற்றும் தொழில்முனைவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு, விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் இன்று (செப்.26) நடைபெற்றது. உடன் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ, எஸ்பி. ஜெயக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, பயிற்சி ஆட்சியர் மாலதி மற்றும் பலர் உள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் வரும் 28ஆம் தேதி குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. இதில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய வருவாய் வட்டங்களைச் சேர்ந்த 49 தேர்வு மையங்களில் 74 தேர்வு அறைகள் ஏற்படுத்தப்பட்டு 22,164 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். மேலும் தேர்வு நடைபெறுவதை பார்வையிட 79 வீடியோக்கள் ஒளிப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்தநிலையில், இன்று (செப்.26) காலை 8.30 மணி நிலவரப்படி, ஸ்ரீமுஷ்ணம் 22.3 மில்லி மீட்டர், மே. மாத்தூர் 22 மி.மீ, பண்ருட்டி 21 மி.மீ, பெலாந்துறை 16.5 மி.மீ, காட்டுமன்னார்கோவில் 14 மி.மீ, எஸ்.ஆர்.சி குடிதாங்கி 10 மி.மீ, வேப்பூர் 9 மி.மீ, கடலூர் 7.9 மி.மீ மற்றும் கீழ்ச்செருவாயில் 2.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

சிதம்பரம் அடுத்த வல்லம்படுகையை சேர்ந்தவர் காய்கறி வியாபாரி மோகன்(35). இவர் நேற்று இரவு அதே பகுதியில் நடந்து சென்ற போது, சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை எதிர்பாராத விதமாக மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கியதில் மோகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பண்ருட்டி அடுத்த ரெட்டிக்குப்பத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி குமரவேல்(33). இவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்கவில்லை என்ற மன வருத்தத்தில், விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமரவேல், இன்று உயிரிழந்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்தநிலையில், இன்று (செப்.26) காலை 8.30 மணி நிலவரப்படி, ஸ்ரீமுஷ்ணம் 22.3 மில்லி மீட்டர், மே. மாத்தூர் 22 மி.மீ, பண்ருட்டி 21 மி.மீ, பெலாந்துறை 16.5 மி.மீ, காட்டுமன்னார்கோவில் 14 மி.மீ, எஸ்.ஆர்.சி குடிதாங்கி 10 மி.மீ, வேப்பூர் 9 மி.மீ, கடலூர் 7.9 மி.மீ மற்றும் கீழ்ச்செருவாயில் 2.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

கடலூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று (26.09.2025) மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் தேர்தல் வட்டாட்சியர் சுரேஷ்குமார், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் உள்ளனர்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொழில் முனைவுத் திட்டம், நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம் மற்றும் PM-AJAY போன்ற திட்டங்களை செயல்படுகிறது. இத்திட்டத்தில் கடனுதவி பெற பயனாளிகள் இ-சேவை மையத்தில் வாயிலாக தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் CM-ARISE, PM-AJAY மற்றும் நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தில், பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (செப்.26) காலை 8.30 மணி நிலவரப்படி, சேத்தியாத்தோப்பு 168.4 மில்லி மீட்டர், புவனகிரி 75 மில்லி மீட்டர், விருத்தாசலம் 65 மில்லி மீட்டர், சிதம்பரம் 53.8 மில்லி மீட்டர், கொத்தவாச்சேரி 50 மில்லி மீட்டர், குறிஞ்சிப்பாடி 47 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டை 31.8 மில்லி மீட்டர், வடக்குத்து 21 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.