India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அஞ்சல் தலை சேகரிக்கும் மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற மாணவர்கள் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு மாணவராக இருக்க வேண்டும். அஞ்சல்தலை தொடர்பான எழுத்து வினாடிவினா வருகின்ற செப்.28ஆம் தேதி நடத்தப்படும். இதற்கு விண்ணப்ப http://tamilnadupost.cept.gov என்ற முகவரியில் பதிவு செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்ட இயக்குனர் அருண் தம்புராஜ் சந்தித்து அவர்களிடம் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவசர சிகிச்சை பிரிவு, மருத்துவமனை வளாகம் என மருத்துவமனை முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் காவலாளியாக பணிபுரிந்து வரும், வில்வநகரைச் சேர்ந்த ஆர்த்தி (38) என்பவர் நேற்று பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குறிஞ்சிப்பாடி அடுத்து ஆடுர் மேலபுதுப்பேட்டையைச் சேர்ந்த தங்கமணி என்பவரை பிரசவ வார்டுக்குள் செல்ல விடாமல் தடுத்ததால், அவர் ஆர்த்தியை சரமாரியாக தாக்கினார். இதுகுறித்து புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து தங்கமணியை கைது செய்தனர்.
வடலூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் முருகன் (50). இவர் கைரேகை ஜோசியம் பார்ப்பவர். இவரை இரவு 8 மணி அளவில் வீட்டின் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் (26) மது போதையில் ஜோதிடர் முருகனை ஆபாசமாக திட்டி, தலையில் வெட்டியதால் படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து வடலூர் போலீஸ் வழக்கு பதிவு செய்து ஸ்டீபன்ராஜை கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தவேண்டும். மேலும் விநாயகர் சிலைகளை கடலூர் உப்பனாறு, தேவனாம்பட்டினம் கடற்கரை, கொள்ளிடம் ஆறு மற்றும் வெள்ளாறு ஆகிய இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் நேற்று அறிவித்தார்.
கடலூரில் புதிய பஸ் நிலையத்தை அதிமுக ஆட்சியில் கலெக்டர் அலுவலகம் அருகில் கட்ட இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாறியதும் எம்.புதூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், தற்போது பாதிரிக்குப்பத்தில் பஸ் நிலையத்தை மாற்றி அமைக்கலாமா என அங்குள்ள கோவில் இடத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். இதனால் பஸ் நிலையம் எங்கே அமைய போகிறது என மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயசங்கா் மனைவி வேம்பு (34). வேம்புக்கும், சிவாவுக்கும் (30) தவறான உறவு இருந்துள்ளது. சிவா வீட்டில் வேம்பு இறந்து கிடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீசார் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சிவாவிடம் விசாரணை செய்ததில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற தகராறில் அவரை அடித்து கொன்றதாக தெரியவந்துள்ளது.
கடலூர் பல்வேறு மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (29-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஊமங்கலம், மேலப்பாளையூர், ஸ்ரீமுஷ்ணம், செம்மங்குப்பம், குணமங்கலம், கீழ்ப்பலையுர், ஆலப்பாக்கம், சி.கீரனுர், இருப்புக்குறிச்சி, சமூட்டிகுப்பம், அம்மேரி, சிப்காட் பகுதி, அரசக்குழி, பொன்னாலகரம், கோபாலபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 30ஆம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. இதற்கு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் மனுக்கள் பெற உள்ளார். இதில் தங்களது கோரிக்கை குறித்து பேச உள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் காலை 8 மணி முதல் 10 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கடலூர் அருகே சாமியார் பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்தவர்கள் நேற்று கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திருக்கை வகை மீன் முள் குத்தியதில் தமிழ் வேந்தன், அரவிந்தன், காயத்ரி, வசந்தா, அப்பு, சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.