India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுப்பேட்டை அருகே கொரத்தி கிராம ஏரியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்த நிலையில், அதனை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் அங்கு விரைந்து வந்த போலீசார் இறந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காட்டுமன்னார்கோயில் வட்டத்திற்குட்பட்ட குமராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்வது மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்தும் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆயுள் போது வட்டாட்சியர் பள்ளி கல்வித்துறை அதிகாரி, ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டத்திற்குட்பட்ட வல்லத்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்வது மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், இன்று (ஆக.31) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரசு பள்ளிக் கல்வித் துறை அதிகாரியிடம் விசாரணை நடத்தினார்.
கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (31/08/2024) கடலூர் உதவி ஆய்வாளர் சீனிவாசன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் லட்சுமி, விருத்தாசலம் உதவி ஆய்வாளர் சிவராமன், நெய்வேலி காவல் ஆய்வாளர் செந்தில்குமார், சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் வாசுதேவன் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உடான் திட்டத்தின் கீழ் நெய்வேலி விமான நிலையத்திலிருந்து விமானங்கள் தொடங்குவது குறித்து கடலூர் எம்பி விஷ்ணு பிரசாத் அனுப்பிய கடிதத்திற்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு பதிலளித்துள்ளார்.
அதில் 14.98 கோடி செலவில் பணிகள் முடிக்கப்பட்டு 9 இருக்கைகள் கொண்ட விமானம் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. அதன்படி, எண்ணூர், புதுவை, நாகை, காரைக்கால், கடலூர், குளச்சல், ராமேஸ்வரம் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாதுகாப்பு குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் ஆகியோர் ஆய்வு செய்தனர். மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளுக்கு நேரடியாக சென்று சிசிடிவிகள் ஆய்வு செய்து ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாநகராட்சி ஆணையாளர் அனு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் நிரந்தரமாகவோ அல்லது குறுகிய காலத்திற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் e-Shram இணையதளத்தில் பதிவு செய்து, புதிய ரேஷன் கார்டு பெறும் வகையில், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் வட்டார வழங்கல் அலுவலரால், விசாரணை செய்து, நிரந்தரமாக கடலூர் மாவட்டத்தில் தங்கி உள்ளவர்களுக்கு, புதிய குடும்ப அட்டை வழங்கப்படும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
வடலூர் போக்குவரத்து பணிமனையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஓய்வு நேரத்தில் தங்கும் புதிய குளிரூட்டப்பட்ட அறை நேற்று திறக்கப்பட்டது. புதிய குளிரூட்டப்பட்ட ஓய்வறையை உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று திறந்து வைத்தார். மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கடலூர் மண்டல பொது மேலாளர் ராகவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
கடலூரில் வாடகை கட்டடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்கள் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டதால், 127 ஆண்டுகள் கடந்த பழைய கலெக்டர் அலுவலகம் பராமரிப்பு இன்றி உள்ளது. அரசு அலுவலகங்களை பழைய கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தால் பழைய நினைவுச் சின்னமாக இந்த கட்டடம் விளங்கும்.
Sorry, no posts matched your criteria.