Cuddalore

News September 3, 2024

கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் இன்று காலை நிலவரப்படி புவனகிரியில் 47 மில்லி மீட்டர் மழையும், சேத்தியாதோப்பில் 40 மி.மீ, ஸ்ரீமுஷ்ணத்தில் 13.1 மி.மீ, சிதம்பரத்தில் 10.6 மி.மீ, பரங்கிப்பேட்டையில் 9.6 மி.மீ, லால்பேட்டையில் 6 மி.மீட்டரும், விருத்தாசலத்தில் 3 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

News September 3, 2024

காடாம்புலியூரில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

image

பண்ருட்டி தாலுகா, காடாம்புலியூர் போலீசார் நேற்று கீழ்மாம்பட்டு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு முந்திரி தோப்புக்குள் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(55), உளுந்தூர்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன்(33), ராஜா(50), அன்பழகன்(32), விழுப்புரம் மாவட்டம் கருவேப்பிலை பாளையம் அன்பு(32), புதுப்பாளையம் சீனு(33) ஆகியோரை கைது செய்தனர்.

News September 3, 2024

கடலூர் மாவட்டத்தில் நாளை மின் தடை அறிவித்துள்ள பகுதிகள்

image

பண்ருட்டி அடுத்த கீழகுப்பம் துணை மின் நிலையத்தில் நாளை (4-ம் தேதி) பராமரிப்பு பணி நடக்க உள்ளது. அதனால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பேர்பெரியான் குப்பம், முத்தாண்டிக்குப்பம், வல்லம், காட்டுக்கூடலூர், முடப்பள்ளி, நமரியன்குப்பம், எலவத்தடி, புலவன்குப்பம், ஒடப்பன்குப்பம், காடாம்புலியூர், புறங்கனி, காட்டாண்டிக்குப்பம், மேலிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மின்தடை செய்யப்பட உள்ளது.

News September 2, 2024

515 மனுக்கள் பெற்ற மாவட்ட ஆட்சியர்

image

கடலூரில் இன்று பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 515 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்தனர். அந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News September 2, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு மண்டல அளவிலான வேலைவாய்ப்பு முகாம் 6.9.2024 அன்று திருச்சியில் நடக்கிறது. இதில் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன் பெறலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று தெரிவித்தார்.

News September 2, 2024

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி

image

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விருதாச்சலம் இருளக்குறிச்சியை சேர்ந்த செந்தில் தனது தாயுடன் மனு அளிக்க வந்தார். இதில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தீக்குளிக்க முயற்சித்தார். போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டணர். கூலி தொழிலாளியான அவர் தனது தாயுடன் வசித்து வருவதாகவும் இவரது நிலத்தினை போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாற்றியுள்ளதாக கூறி மனு கொடுத்தார்.

News September 2, 2024

கடலூரில் மீன்கள் விலை குறைவு

image

கடலூர் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மீன்கள் வாங்குவதற்காக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர். மீன்களின் வரத்து அதிகமாக இருந்ததால் விலை வழக்கத்தைவிட குறைந்து காணப்பட்டது. அதாவது 1 கிலோ வஞ்சிரம் 750 ரூபாய், சங்கரா 300 ரூபாய் மற்றும் திருக்கை மீன் கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. மீன்கள் விலை குறைவாக இருந்ததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

News September 2, 2024

அரசு பேருந்து மோதி கொத்தனார் உயிரிழப்பு

image

சீர்காழி தாலுகா கீழவாடியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (35). இவர் விருத்தாசலத்தில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் மணவாளநல்லூர் நோக்கி சென்றபோது எதிரே மு.பரூர் பகுதியிலிருந்து விருத்தாசலம் நோக்கி வந்த அரசு பேருந்து மோதியதில் கோவிந்தராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 1, 2024

புவனகிரியில் ஆன்லைனில் லாட்டரி விற்றவர் கைது

image

புவனகிரியில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரியை பங்களா அருகில் ஏஎஸ்ஆர் நகரில் அரிசி கடை ஒன்றில் ஆன்லைனில் விற்பனை செய்த கடையின் உரிமையாளர் மூர்த்தி என்பவரை சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் தனிப்படையினர் இன்று கைது செய்து புவனகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை அடுத்து மூர்த்தி மீது புவனகிரி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

News September 1, 2024

சிதம்பரம் அருகே விஷப்பூச்சி கடித்து விவசாயி பலி

image

சிதம்பரம் அருகே உள்ள இளனாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்ற விவசாயி தனது வயலுக்கு சென்ற போது அவரை விஷப்பூச்சி ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது. இதில் மயக்கம் அடைந்த சுந்தரமூர்த்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை விவசாயி உயிரிழந்தார். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.