India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சித்திரப்பேட்டை பகுதியை சேர்ந்த முகுந்தன்(16), கடந்த சில நாட்களுக்கு முன் சக மீனவர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது கடலில் தவறி விழுந்து மாயமானார். இதையடுத்து முகுந்தனை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், ராசாப்பேட்டை கடற்கரையில் நேற்று சிறுவனின் உடல் கரை ஒதுங்கியது. தகவலறிந்த முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

ஆனந்தகுடியைச் சேர்ந்த முகில் வேந்தன் என்பவர் என்னநகரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பெண் கர்ப்பமான நிலையில், அவரை திருமணம் செய்து கொள்ள முகில் மறுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண் சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து காவல் நிலையம் வந்த இருதரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.10) இரவு 10 மணி முதல் இன்று (அக்.11) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்!

கடலூரில் அக்டோபர் மாதத்திற்கான பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நாளை (அக்.11) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கடலூர் பீச்ரோட்டில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் பிரிவில் நடத்தப்படும். இதற்கு வட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற உள்ளார் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

கடலூர் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழில் பேச்சாற்றலையும் படைப்பாற்றலையும் வளர்க்கு நோக்கில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்தியா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் அக்டோபர் 14 அன்று பள்ளி மாணவர்களுக்கும், 15 அன்று கல்லூரி மாணவர்களுக்கும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர், அண்ணா பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத பெண் சடலம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பரபரப்பாக இருக்கக்கூடிய கடலூர் மையப் பகுதியான அண்ணா மேம்பாலத்தின் கீழ், அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் இன்று மதியம் புது நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதையெடுத்து, சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் பண்ணை சார்ந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் (அக்.9) அறிக்கை வெளியிட்டுள்ளார். விவசாயம், அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்ற மற்றும் 2 ஆண்டுகள் கள அனுபவம் உள்ளவர்கள் கடலூர் மகளிர் திட்ட இயக்குநர் அலுவலகத்தில் வரும் அக்.17-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 9444094258 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

கனரா வங்கியில் தமிழ்நாடு முழுவதும் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. பணி: Graduate Apprentices
2. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.15,000
4. வயது வரம்பு: 20-28 (SC/ ST-33, OBC 31)
5. கடைசி தேதி: 12.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் 4 பேரும், கடலூர் தனியார் மருத்துவமனையில் 3 பேரும், கடலூர் அரசு மருத்துவமனையில் ஒருவரும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடலூர் செம்மண்டலம் பகுதியை சேர்ந்த ஒருவர் தனது முகநூலில் வந்த டெல்லிகார்ஸ் விளம்பரத்தில் குறைந்த விலைக்கு கார் விற்பனைக்கு உள்ளதை நம்பி, முன்பணமாக ரூ.1,47,000-ஐ ஆன்லைனில் செலுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு கார் வழங்காமல், சைபர் கிரைம் மோசடி நடந்தது. இதுகுறித்து கடலூர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து ஆன்லைனில் மோசடியில் ஈடுபட்ட நாகப்பட்டினத்தை சேர்ந்த ரமேஷ் (33) என்பவரை நேற்று கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.