Cuddalore

News September 11, 2024

சிறப்பு ஆய்வுக்குழு அமைப்பு: ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் சட்ட விதிகளுக்குட்பட்டு தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆய்வுக்குழு அமைத்து பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும். இதில் விதி மீறல்கள் காணப்பட்டால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News September 11, 2024

கடலூர் மாணவிகள் நான்கு பேர் சிதம்பரத்தில் மீட்பு

image

கடலூரில் ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் நான்கு பேர் திடீரென மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிதம்பரம் பகுதியில் நள்ளிரவு 11 மணி அளவில் சுற்றித்திரிந்த மாணவிகள் நான்கு பேரையும் சிதம்பரம் போலீசார் விசாரணை செய்தனர். அவர்கள் கடலூர் பள்ளியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. பின்னர் அவர்களை மீட்டு கடலூர் அழைத்து வந்து ஒப்படைத்தனர்.

News September 11, 2024

கடலூரில் மாணவிகள் 4 பேர் திடீர் மாயம்

image

கடலூர் புதுநகரில் உள்ள புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகள் இன்று மாலை பள்ளி முடிந்ததும் பள்ளியில் இருந்து வெளியே சென்றனர். ஆனால் அவர்கள் வீடு திரும்பவில்லை. அதனால் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் மாயமான 4 மாணவிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News September 10, 2024

கடலூர்: புதிய வழித்தடத்தில் பேருந்தை துவக்கி வைத்த அமைச்சர்

image

திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நல்லூர் தெற்கு ஒன்றியம், தீவளூர் கிராமத்தில் இருந்து பெண்ணாடம் வரையிலான புதிய அரசு பேருந்து வழித்தடங்களை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர், சி.வெ.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

News September 10, 2024

லாரி-கார் மோதி விபத்து; ஒருவர் பலி

image

குமாரக்குடி பகுதியில் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அவ்வழியாகச் சென்ற காரும் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் காரின் முன்புறம் உருகுலைந்தது. விபத்தில் படுகாயமடைந்த சாலை ஒப்பந்ததாரர் ரவிச்சந்திரன் மற்றும் கார் ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ரவிச்சந்திரன் செல்லும் வழியிலே உயிரிழந்தார்.

News September 10, 2024

சிதம்பரத்தில் மூதாட்டியிடம் 90,000 ரூபாய் திருட்டு

image

சிதம்பரம் மின் நகர் பகுதியை சேர்ந்தவர் சமீரா பேகம், நேற்று பணம் எடுப்பதற்காக அருகில் இருந்த ஏ.டி.எம்-க்கு சென்றுள்ளார். அப்போது அருகில் இருந்த நபரிடம் ஏ.டி.எம் கார்டு மற்றும் கடவு எண்னை கூற அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.90,000 பணத்தை அந்நபர் திருடிச்சென்றுள்ளார். இது குறித்து சமீரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 10, 2024

இரவு ரோந்து பணி செல்லும் அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று கடலூர் காவல் ஆய்வாளர் இராஜாராமன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் லட்சுமி, விருத்தாசலம் காவல் ஆய்வாளர் குணபாலன், நெய்வேலி காவல் ஆய்வாளர் வள்ளி, சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் வீரசேகரன் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 9, 2024

கடலூர்: சென்னை செல்லும் ரயில் சேவையில் மாற்றம்

image

திருச்சி – சென்னை செல்லும் சோழன் அதிவிரைவு ரயில் நாளை 10ஆம் தேதி அன்று திருச்சியில் இருந்து அரியலூர், விருத்தாச்சலம், நெய்வேலி, கடலூர் துறைமுகம், விழுப்புரம் வழியாக சென்னை செல்லும். எனவே நாளை ஒரு நாள் மட்டும் தஞ்சை, மயிலாடுதுறை, சிதம்பரம் வழியாக செல்லாது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

News September 9, 2024

கடலூர்: அங்கன்வாடிகளை தரம் உயர்த்த ரூ.1½ கோடி ஒதுக்கீடு

image

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் துறையின் கீழ் அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன. இதில் கடலூர் மாவட்டத்தில் 2023 அங்கன்வாடி மையங்கள் உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 140 அங்கன்வாடி மையங்களை நவீன முறையில் தரம் உயர்த்த ரூ.1½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

News September 9, 2024

கிராமங்களில் கட்டடம் கட்ட ஆன்-லைனில் அனுமதி

image

கடலூர் மாவட்டத்தில், 684 கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்கு வீடு மற்றும் கட்டிடங்கள் கட்ட நேரடியாக அனுமதி கிடையாது. கிராம ஊராட்சிகளில் மனை அனுமதி மற்றும், கட்டட வரைபட அனுமதி இணையம் மூலம் மட்டுமே பெற வேண்டும் என, ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது. தவறினால், வீடுகள் தொழில் நிறுவனங்களுக்கு வீட்டு வரி, சொத்து வரி வழங்கப்பட மாட்டாது. புதிய குடிநீர், மின் இணைப்புகள் இதன் அடிப்படையிலேயே இனி வழங்கப்படும்.