Cuddalore

News March 21, 2024

கடலூர் சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு

image

கடலூர், திருப்பாதிரிப்புலியூர், சீரடி சாய்பாபா ஆலயத்தில் பங்குனி மாத வியாழக்கிழமையை முன்னிட்டு, இன்று சாய்பாபாவிற்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் ஆராதனை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாய்பாபாவை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது.

News March 21, 2024

கடலூர்: நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம்

image

திராவிட முன்னேற்றக் கழக கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின்படி, கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் எம்.ஆர்.கே.பி கதிரவன், கடலூரில் OMR (ஒ.எம்.ஆர்) படிவம் நிரப்பும் பணிகள் குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் பணி குறித்தும் ஆலோசனைகளை இன்று வழங்கினார். உடன் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

News March 21, 2024

கடலூரில் ஆவணமின்றி பணம் பறிமுதல்

image

நாடாளுமன்ற தேர்தலில் முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியகாட்டுப்பாளையத்தில் இன்று பாண்டிச்சேரியைச் சேர்ந்த சுரேந்திரபால் என்பவர் உரிய ஆவணமின்றி ரூ.78 ஆயிரத்து 300 ரூபாயை எடுத்து சென்றார்.இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அவரிடமிருந்து 78,300 ரூபாயை பறிமுதல் செய்து, கடலூர் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

News March 21, 2024

கடலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்

image

கடலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் அண்ணா தலைமை தாங்கினார். மத்திய குழு உறுப்பினர் வாசகி சிறப்பு உரையாற்றினார். இந்த கூட்டத்தில் என்எல்சி சுரங்க நிறுவனத்தின் 7 சதவீத பங்குகளை விற்பனை செய்யக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் மாதவன் நன்றி தெரிவித்தார்.

News March 21, 2024

கடலூர் தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழகம், புதுவையில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணியே அமைக்காமல் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி இன்று (மார்ச் 21) 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர் (பாதிக்கு பாதி பெண்கள்) பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி கடலூர் தொகுதி வேட்பாளராக வே.மணிவாசகம் களம் காண்கிறார்.நாளை மறுநாள் (மார்ச்-23) அன்று சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News March 21, 2024

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடாளுமன்றத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. அரசியல் கட்சிகள், கட்சி தலைவர்கள் மற்றும் சின்னங்கள் வைத்து விளம்பரம் வெளியிட ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News March 21, 2024

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி; அமைச்சர் ஆலோசனை

image

கடலூர் கிழக்கு மாவட்டம், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட தொகுதி திமுக பார்வையாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் ஆய்வுக் கூட்டம் நேற்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

News March 20, 2024

கடலூரில் வரும் 5-ஆம் தேதி ஸ்டாலின் பிரச்சாரம்

image

நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் விவரம் திமுக சார்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடலூரில் 05/04/2024 (வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் செய்ய உள்ளார்.

News March 20, 2024

கடலூர் பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு

image

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவின் அவசியம் குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திற்கு இன்று காலை வந்த பேருந்துகளில் இருந்த பயணிகளிடம், கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் தலைமையில், கடலூர் எஸ்.பி உள்ளிட்டோர் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News March 20, 2024

கடலூர் தேமுதிக-வுக்கு ஒதுக்கீடு..!

image

வரும் 2024-நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக-வுக்கு கடலூர் உள்பட 5 தொகுதிகள் ஒதுக்குக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலாதா விஜயகாந்த கூட்டாக அறிவித்தனர். இதனையடுத்து விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் போட்டியிட உள்ளனர். விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்க வாய்ப்புள்ளது.

error: Content is protected !!