India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கூகுளில் <

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project scientist, Project Associate உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 22
3. சம்பளம்: ரூ.12,000 – ரூ.1,00,000/-
4. கல்வித் தகுதி: 10th / 12th / Diploma / B.E / BTech / M.E / M.Tech
5. கடைசி தேதி: 10.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதுடைய 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த விதேசி (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் தேசி, மாணவியை சந்திக்க நேரில் அழைத்து, சைக்கிள் ஓட்ட சொல்லித்தருவதாகக் கூறி, மாணவியிடம் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கடலூர் போலீசார், தேசி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தைச் சேர்ந்தவர் வீரமணி மனைவி உமா (40). இவரது கொழுந்தன் மகள் திருமண அழைப்பிதழில் தனக்கு பிடிக்காதவர்களின் பெயர் உள்ளதால், யாரும் திருமண நிகழ்ச்சிக்கு செல்லக்கூடாது என வீரமணியுடன் உமா தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் நேற்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குறிஞ்சிப்பாடி அடுத்த அயன் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த 18-வது வார்டு கவுன்சிலரான ராஜ்குமாருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிவாவுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக நேற்று சிவா மனைவி வானஸ்டி, ராஜ்குமாரை திட்டியதால் மனமுடைந்த ராஜ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை அன்பு நகரை சேர்ந்த அந்தோணி மகன் பிரசாந்த் (25) என்பவர் கஞ்சா வழக்கில் தண்டனை பெற்று மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நிர்வாக காரணங்களுக்காக, கடலூர் மத்திய சிறைக்கு ஏப்ரல் 4ம் தேதி மாற்றப்பட்டார். இந்நிலையில், நேற்று (ஜன.4) மாலை அறையில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.04) இரவு 10 முதல் இன்று (ஜன.05) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

Sorry, no posts matched your criteria.