India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூரில் கடந்த 1 மாதமாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் தபால் நிலைய பேருந்து நிறுத்தம், செம்மண்டலம் சிக்னல் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடலூர் மாநகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் வெயிலில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பானையில் வைத்திருக்கும் தண்ணீரை பருகி தாகத்தை தீர்த்து செல்கின்றனர்.
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் 79-வது ஆண்டு விழா, கடலுார் சங்க அலுவலகத்தில் நடந்தது. விழாவிற்கு, தாலுகா வங்கி ஊழியர் சங்கத் தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். இந்தியன் வங்கி கடலுார் மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் வினோத், சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டத் தலைவர் மீரா பேசினார். வங்கி ஓய்வூதியர் சங்க மூத்த தலைவர் வாழ்த்தி பேசினார்.
விருத்தாசலம் அடுத்த சாத்துக்குடல் கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (38).நேற்று பெரியவடவாடியில் உள்ள தனது உறவினர் வீட்டு காதணி விழாவிற்கு சென்று விட்டு நேற்று மாலை 4 மணி அளவில் பெரியவடவாடி பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார்.இப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதி வெங்கடேசன் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த சாத்துக்குடல் கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (38).நேற்று பெரியவடவாடியில் உள்ள தனது உறவினர் வீட்டு காதணி விழாவிற்கு சென்று விட்டு நேற்று மாலை 4 மணி அளவில் பெரியவடவாடி பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார்.இப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதி வெங்கடேசன் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடலூர் சட்டமன்ற தொகுதியில் 2,41,751 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 80,340, பெண் வாக்காளர்கள் 84,819, மூன்றாம் பாலினத்தினர் 37 பேர் என மொத்தம் 1,65,196 பேர் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்தனர். அந்த வகையில் கடலூர் சட்டமன்றத் தொகுதியில் 68.33 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் உதவி ஆய்வாளர் மணிவண்ணன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாதா, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் தனசேகர், நெய்வேலி காவல் ஆய்வாளர் இராஜராஜன் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் ஜவ்வாது ஹுசைன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் பதிவான ஓட்டு சதவீதம் என்பது 3வது முறையாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 69.71 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, சிதம்பரத்தில் 76.37 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் இறைச்சி வாங்கி சாப்பிடுவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலான இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை ஆணையர் உத்தரவின்படி,மகாவீர் ஜெயந்தி ஆன இன்று மற்றும் தொழிலாளர் தினமான மே 1ம் தேதி ஆகிய 2 நாட்கள்,கடலூர் மாவட்டத்தில் அரசு மதுபான கடை மற்றும் மதுபான கடையுடன் இணைந்த மதுபான கூடங்கள் மூடப்படுகிறது.மீறி விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது
கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கோடைக்கால 2-ம் கட்ட நீச்சல் வகுப்புகள் கடந்த 16-ம் தேதி துவங்கி வரும் 28ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இந்நிலையில் 3-ஆம் கட்ட நீச்சல் வகுப்பு வரும் 30-ம் தேதி முதல் மே மாதம் 12-ம் தேதிவரை நடைபெற உள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் செ. மகேஷ்குமார் தெரிவித்துள்ளாா்.
Sorry, no posts matched your criteria.