India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் அல்லது <

புதுப்பேட்டை அடுத்த அக்கடவல்லியை சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் தொழிலாளி சிவசங்கர் (40). இவருக்கு, மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

கடலூர் மக்களே, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து ரூ.3000 பணத்தை, வரும் ஜன.13-ம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இதனை பெறுவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ அல்லது டோக்கன்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படாமல் இருந்தால், உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு நீங்கள் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

காட்டுமன்னார்கோவில் அடுத்த வடக்கு கொளக்குடியை சேர்ந்தவர் ராஜி (42). இவர் நேற்று இரவு பெரம்பலூரில் இருந்து எம்சாண்ட் மணலை லாரியில் ஏற்றிக்கொண்டு குமராட்சி அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் நின்ற புளிய மரத்தில் மோதி நின்றது. இதில் காயமடைந்த ராஜி, காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து குமராட்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

திட்டக்குடி பஸ் நிலையத்தில் நேற்று 75 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக கிடந்துள்ளார். உடனே திட்டக்குடி போலீசார் இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரித்தனர். அதில், இறந்தவர் பெரம்பலூர் மாவட்டம், சின்னவெண்மணியை சேர்ந்த கொளஞ்சி (75) என்பதும், கடந்த 5 மாதங்களுக்கு முன் அவர் வீட்டைவிட்டு வெளியே வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து இதுகுறித்து திட்டக்குடி போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

சென்னை எக்மோரில் இருந்து கன்னியாகுமரிக்கு தினசரி செல்லும் கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று இரவு 8:40 மணிக்கு விருத்தாசலம் ஜங்ஷனுக்கு வந்தபோது, ரயிலின் பின்புறம் உள்ள பொது பெட்டியில் பிரேக் பழுதாகி இருந்ததை, லோகோ பைலட் கண்டு பிடித்தனர். பின்னர் ரயில்வே ஊழியர்கள் பழுதான பிரேக்கை சரி செய்ததும், சுமார் 1.5 மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

சிதம்பரம் அருகே உள்ள பின்னத்தூர் கிராமத்தில் ராமநாதேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் உள்ள பிரகாரத்தில் சுப்பிரமணியர் சன்னதியில், பாம்பன் சுவாமிகள் கடும் தவம் மேற்கொண்டு கந்தசஷ்டி விரதத்தை தொடங்கினார் என வரலாறு கூறுகிறது. ராமநாதேஸ்வரர் ஊமைப் பெண்ணை பேச வைத்த சிறப்பும் இந்த ஆலயத்துக்கு உள்ளதால் பேச்சு குறைபாடு உள்ளவர்கள் இங்கு வழிபட்டால் பேச்சு குறைபாடு நீங்கும் என்பது ஐதீகம். SHARE பண்ணுங்க!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) 2025-26ல் காலியாக உள்ள Aadhaar Supervisor/ Operator உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 282
3. வயது:18 வயதுக்கு மேல்
4. சம்பளம்: ரூ.20,000
5. கல்வித் தகுதி: 10th,12th, Diploma
6. கடைசி தேதி: 31.01.2026
7.மேலும் தகவலுக்கு: CLICK <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.