India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூரில் உள்ள பாடலீஸ்வரர் கோயில் தேவார பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் 18ஆவது தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காசியில் 16 முறை இறைவனை வணங்குவதும், இங்கு ஒரு முறை வணங்குவதும் சமம் என நம்பப்படுகிறது. திருவண்ணாமலையில் 8 முறையும், சிதம்பரத்தில் 3 முறையும், இத்தலத்தில் ஒருமுறையும் வணங்குவது சிறப்பாகும். தெரியாத உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க !

கடலூர் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <

கடலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்<

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் ஜன.10 மற்றும் ஜன.11 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

கடலூர் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு<

கொங்கராயனூரைச் சேர்ந்தவர் தக்ஷிணாமூர்த்தி (35). விவசாயியான இவர் கடந்த ஜன.5 அன்று மேல்பட்டாம்பாக்கம் செக் போஸ்ட் அருகே டிராக்டரில் சென்று கொண்டிருந்த போது, பி.என். பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் வழி விடாமல் நடந்து சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் தட்சிணாமூர்த்தியை சுரேஷ் கட்டையால் தாக்கியதில், தக்ஷிணாமூர்த்தி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து நெல்லிக்குப்பம் போலீசார் சுரேஷை கைது செய்தனர்.

சிதம்பரம் மாரியப்பா நகரை சேர்ந்தவர் கலா (50). அண்ணாமலை பல்கலைக்கழக நூலகத்தில் பணிபுரிந்து வரும் இவர், நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மாரியப்பா நகர் அருகே சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் கலா கழுத்தில் இருந்த 11 சவரன் செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட தமிழக அரசு பொங்கல் பரிசுத்தொகுப்பினை அறிவித்துள்ளது. இதற்காக கடலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்க்கும் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன் அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை நேரில் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜன.7) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.8) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.