India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (17/08/2024) கடலூர் காவல் ஆய்வாளர் தீபா, சிதம்பரம் காவல் ஆய்வாளர் ஜெர்மின்லதா, விருத்தாசலம் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் ராஜதாமரை பாண்டியன், சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் சந்திரா ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்கலாம் என்ற தவறான பதிவுகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. இத்தகைய தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே சமூக வலைதளங்களில் பரப்பப்படும் உண்மைக்கு புறம்பான செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கடலூர் மாவட்டம் சார்பில் 2024-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. தகுதியுடையோர் WWW sdat.tn.govt.in என்ற இணையதளத்தில் வரும் 25ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். விவரங்களுக்கு 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை இடி-மின்னலுடன் சாரல் மழை பெய்தது. இதில் இன்று காலை நிலவரப்படி சேத்தியாதோப்பில் 3.2 மி.மீ. மழையும், கடலூரில் 3 மி.மீ., கொத்தவாச்சேரியில் 2 மி.மீ., வானமாதேவியில் 1.4 மி.மீ., புவனகிரி, லால்பேட்டை மற்றும் சிதம்பரத்தில் தலா 1.1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு இரண்டு முறை சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. மும்பையில் இருந்து ஆக.27, செப்.6 தேதிகளிலும், வேளாங்கண்ணியில் இருந்து ஆக.29, செப்.8 தேதிகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு துவங்கி உள்ளது. இந்த ரயில் புனே, சோலாபூர், ராய்ச்சூர், ரேணிகுண்டா, திருவண்ணாமலை, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர் வழியாக செல்லும்.

கடலுாரில் ரவுடியை வெட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கம்மியம்பேட்டையைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் நேற்றிரவு (ஆக.16) 10:00 மணிக்கு கம்மியம்பேட்டை அய்யனார் கோவில் அருகில் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத 2 பேர் திடீரென மூர்த்தியை சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுதந்திர தினம் அன்று தொழிலாளர்களுக்கு நிறுவனங்கள் விடுமுறை அளிக்கவேண்டும். இதை மீறினால் மாற்று விடுப்பு அல்லது இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் ஞானரகாசம் தலைமையில் அதிகாரிகள், கடலூர் மாவட்டத்தில் ஆய்வு செய்து சுதந்திர தினம் அன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 41 நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தனர்.

கடலூர் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வையாபுரிப்பட்டினம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா என கேட்டறிந்தார். அப்போது அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பியின் 62வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை, காமராஜர் அரங்கில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், வி.சி.க கடலூர் மாநகர செயலாளர் செந்தில், கடலூர் ஒன்றிய பொருளாளர் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று கடலூர் மாவட்டத்தில் அனைத்து உதவி காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.