Cuddalore

News March 23, 2024

கடலூர்: திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம்

image

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம், கடலூர் மாவட்ட திமுக பொருளாளர் எம்.ஆர்.கே.பி கதிரவன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தொகுதிகளில் உள்ள மாவட்ட, சட்டமன்ற, ஒன்றிய, நகர, பேரூர் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

News March 23, 2024

கடலூர் ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு

image

கடலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், கடலூர் உழவர் சந்தை அருகே இன்று ஆட்டோ டிரைவரிடம் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் ஆட்டோக்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும், தாறுமாறாக நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். அப்போது ஆட்டோ டிரைவர்கள் உடன் இருந்தனர்.

News March 23, 2024

கடலூர் அருகே அதிரடி ரெய்டு 

image

விருத்தாசலம் (ச.ம.தொ) தேர்தல் பறக்கும் படை அதிகாரியான ராதிகா தலைமையிலான குழுவினர் கண்டப்பன்குறிச்சி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்த போது சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை மகன் ராஜேஷ் குமார் (35) என்பவர் 79 ஆயிரத்து 665 ரூபாயை எவ்வித ஆவணமுமின்றி வைத்திருந்தார். இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து துணை தாசில்தார் கோவிந்தனிடம் ஒப்படைத்தார்.

News March 23, 2024

கடலூர்: 17வயது சிறுமியை கர்ப்பமாக்கியவர் மீது ‘போக்சோ’

image

உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் கேசவன். இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வீட்டை விட்டு வெளியேறி கடந்த ஆண்டு கடலூர்,திருவந்திபுரம் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவரது தாய்க்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து அவர் நேற்று அளித்த புகாரின் பேரில் கடலூர் அனைத்து மகளிர் போலீசார் ‘போக்சோ’ சட்டத்தில் வழக்கு பதிந்து கேசவனை தேடி வருகின்றனர்

News March 23, 2024

வாழ்த்து தெரிவித்த கடலூர் பாஜக நிர்வாகிகள்

image

மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில‌ செயலாளர் வினோஜ் செல்வத்தை, கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கோவிலானூர் ஜி. மணிகண்டன் தலைமையில், பாஜக மாவட்ட, மண்டல நிர்வாகிகள் நேற்று நேரில் சென்று சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

News March 22, 2024

வாகனங்களில் ஒட்டுவில்லை ஒட்டி விழிப்புணர்வு

image

பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, கடலூர் டவுன்ஹால் அருகே 100% வாக்களிப்பது குறித்து மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகளின்
வாகனங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் இன்று (22.03.2024) ஒட்டுவில்லைகளை ஒட்டினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர்
இராஜசேகரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

News March 22, 2024

அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிக்கை வெளியீடு

image

தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வருகின்ற 24.03.2024 மாலை 3 மணியளவில் வடலூர், மங்கையர்கரசி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News March 22, 2024

கடலூர் தேமுதிக வேட்பாளர் அறிவிப்பு

image

தேமுதிக சார்பில் கடலூர் மக்களவைத் தொகுதியில் சிவக்கொழுந்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024ஐ ஒட்டி தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிகவுக்கு, 5 தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில், வேட்பாளர்களை தேமுதிக தற்போது அறிவித்துள்ளது. விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

News March 22, 2024

தேர்தல்: பாஜக வேட்பாளர் அறிவிப்பு

image

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் தே.ஜ. கூட்டணியின் பாஜக வேட்பாளராக கார்த்தியாயினி அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தில் பாஜக நேற்று 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

News March 22, 2024

கடலூரில் தேமுதிக வேட்பாளராக சிவக்கொழுந்து போட்டியா?

image

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேமுதிக போட்டியிடுகிறது. இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ சிவக்கொழுந்து போட்டியிடுவார் என தெரிகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!