India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ இன்று தந்த சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக சர்வாதிகாரி போன்று செயல்பட்டு வந்த ஆளுநருக்கு சாட்டையடி., உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் அருகே உள்ள பின்னத்தூர் கிராமத்தில் ராமநாதேஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோயில் பிரகாரத்தில் சுப்பிரமணியர் சன்னதி அமைந்துள்ளது. இந்த சன்னதியில் பாம்பன் சுவாமிகள் கடும் தவம் மேற்கொண்டு கந்தசஷ்டி விரதத்தை தொடங்கினார் என வரலாறு கூறுகிறது. ராமநாதேஸ்வரர் ஊமைப் பெண்ணை பேச வைத்த சிறப்பும் இந்த ஆலயத்துக்கு உள்ளது. பேச்சு குறைபாடு உள்ளவர்கள் இந்த ஆலயத்தில் வழிபட்டால் பேச்சு குறைபாடு நீங்கும்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே ரூ. 83,500 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கள்ள நோட்டு விவகாரத்தில் போலீசாரால் தேடப்பட்டு வரும் செல்வம் விசிகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கள்ள நோட்டு அச்சிடப்பட்ட விவகாரம் தொடர்பாக தலைமறைவாக இருந்த கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த கமல் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் ரேஷன் பொருட்களை முறைகேடாக வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் பண்ருட்டியில் உள்ள ஒரு வீட்டில் 1,200 கிலோ அரிசி, 170 கிலோ துவரம் பருப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்டவைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 222 அங்கன்வாடி பணியிடங்கள், 3 குறு அங்கன்வாடி பணியிடங்கள் மற்றும் 243 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10, 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையத்தில் ஏப்ரல் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். (SHARE பண்ணுங்க)
மகாவீர் ஜெயந்தி தினமான ஏப்.,10ஆம் தேதி அன்று கடலூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக் கூடங்கள் மற்றும் மனமகிழ் மன்றங்களை மூட வேண்டும். இதை மீறி திறந்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மீது கடுமையான குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
முன்னாள் படைவீரர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் பல்வேறு விதமான தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. அதனால் தொழில்களில் பயிற்சி பெற விரும்பும் முன்னாள் படைவீரர்கள் உடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரம் பெற கடலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ 04142-220732 தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் வணிக மேம்பாட்டு நிர்வாகி (Business Development Executive) பணிக்கான 100 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.15,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிகிரி முடித்தவர்கள் இங்கே<
கடலூர் புதுவண்டிபாளையத்தில் உள்ள சுப்பிரமணியர் ஆலயம் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயமாகும். இங்கு “வேல் கோட்டம்” தனியே அமைந்துள்ளது. இதற்கு ஞாயிறு, கிருத்திகை, பூச நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது.இந்த வேலை தொடர்ந்து வழிபடுபவர்களுக்கு எல்லாவித பலன்களும், தீராத கொடிய நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.
கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Project Coordinator/Area Field Officers) உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.10,000 வரை வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு இங்கே <
Sorry, no posts matched your criteria.