India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வரை 30 பேர் மனுதாக்கல் செய்தனர். இந்நிலையில், இன்று கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் அனைவரின் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்று வருகிறது .இதில் தேமுதிக, காங்கிரஸ், பாமக, நாம் தமிழர் கட்சி போன்ற முக்கிய கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனு ஏற்கப்பட்டன. வேட்பு மனு பரிசீலனையில் வேட்பாளர்கள் கொடுத்துள்ள சொத்து விவரம் மற்றும் ஆவணங்கள் குறித்து பரிசீலனை நடைபெற்றது.
கடலூர் ஆட்சியர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் பாதுகாப்பில் காவல்துறையுடன் இணைந்து முன்னாள் ராணுவ வீரர்கள் ஈடுபட உள்ளனர். விருப்பமுள்ள கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 65 வயதுக்குட்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் கடலூர், சப்-ஜெயில் சாலையில் உள்ள முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 04142-220732 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கிறது. அதையொட்டி வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ம் தேதி துவங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் நேற்று கடலூர் தொகுதியில் போட்டியிட 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் நா.த.க மணிவாசகம், தேமுதிகவில் கூனங்குறிச்சியை சேர்ந்த பெரியநாயகராஜ் ஆகியோர் 2-வது மனு உட்பட 7 பேர் என, கடலூர் தொகுதியில் மொத்தம் 24 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, இன்று திறக்கப்பட உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தை, பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் சண் முத்துகிருஷ்ணன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எம்.கே. விஷ்ணு பிரசாத், கடலூர், சூரப்பநாயக்கன் சாவடியில் உள்ள காரல் மார்க்ஸ் சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியினரிடம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கோரினார். இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், திமுக மாநகர செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திராவிட முன்னேற்ற கழக கடலூர், திருப்பாதிரிப்புலியூர் தகவல் தொழில்நுட்ப அணி பகுதி ஒருங்கிணைப்பாளர் அ. விக்னேஷ் இன்று கடலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் எம்.கே. விஷ்ணு பிரசாத்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். உடன் காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (27/03/2024) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாதா, விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் சந்திரசேகர், நெய்வேலி காவல் ஆய்வாளர் சந்திரன் மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் சுபிக்ஷா ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பாமக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் இன்று நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சண் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பண்ருட்டி அருகே உள்ள புலவன்குப்பம் ராஜாபாளையம் மெயின் ரோட்டில் வசித்து வந்த வேலு மனைவி சுகுணா தம்பதியினர் ஆவர். இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த வேலு தனக்கு சொந்தமான வயலில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்தார். இன்று சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் தெருவில் இருந்து அவர் பிரச்சாரத்தை துவக்கினார். இதில் அதிமுக மாவட்ட செயலாளர் மாஜி அமைச்சருமான எம்.சி சம்பத் மாவட்ட அவைத் தலைவர் சேவல் குமார் மற்றும் ஏராளமான அதிமுக மற்றும் தேமுதிக கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.