India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காட்டுமன்னார்கோயில் அடுத்த முட்டம் கிராமத்தை சேர்ந்தவர் 38 வயது தொழிலாளி. இவர் 6ம் வகுப்பு படிக்கும் 11 வயதுடைய தனது மகளை இன்று மது போதையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி காட்டுமன்னார்கோயில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சிறுமியின் தந்தை மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (24/08/2024) கடலூர் உதவி ஆய்வாளர் உத்ரம்மாள், சிதம்பரம் உதவி ஆய்வாளர் சங்கர், விருத்தாசலம் உதவி ஆய்வாளர் சிவகாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் செந்தில்குமார், சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விசிக கடலூர் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் மற்றும் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், மண்டல செயலாளர் ராஜ்குமார், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் செல்லப்பன், மாவட்ட செயலாளர்கள் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சன்னியாசிப்பேட்டை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பெருமளவில் மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் இன்று (24.08.2024) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

தாம்பரம் – வேளாங்கண்ணி (06119) இடையே வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதியும், வேளாங்கண்ணி – தாம்பரம் (06120) இடையே ஆகஸ்ட் 30-ஆம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் செங்கல்பட்டு, பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், கடலூர் துறைமுகம், பரங்கிப்பேட்டை வழியாக வேளாங்கண்ணிக்கு செல்லும். இந்த சிறப்பு ரயிலில் 3 ஸ்லீப்பர், 3 மூன்றாம் வகுப்பு ஏசி, 7 பொதுப் பெட்டிகள் என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன.

விருத்தாச்சலம் அருகே மாத்தூர் அரசு பள்ளியில் குடிநீர், கழிவறை வசதி இல்லை என பெற்றோர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோர் கழிவறைக்குள் சென்று பார்த்தபின் அங்கு கதவோ, தண்ணீர் வசதியோ இல்லாததை கண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 500க்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் பள்ளியில் கழிவறை முறையாக பராமரிக்கப்படவில்லை என குற்றமச்சட்டியுள்ளார்.

திட்டக்குடி தாலுகா பெண்ணாடத்தில் அருள்மிகு பிரளய காளீஸ்வரர் உடனுறை அழகிய காதலியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு இன்று மாலை பள்ளிச் சீருடையில் வந்த மாணவர்கள் சிலர் உண்டியலில் தீக்குச்சி கொளுத்தி போட்டுவிட்டு ஓடி விட்டனர். இதில் உண்டியலில் இருந்த காணிக்கை பணம் முழுவதும் தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து பெண்ணாடம் போலீசார், சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும். எனவே 35 வயதிற்குட்பட்டவர்கள் 30.8.2024-க்குள், கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (23/08/2024) கடலூர் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார், சிதம்பரம் காவல் ஆய்வாளர் லட்சுமி, விருத்தாசலம் காவல் ஆய்வாளர் குணபாலன், நெய்வேலி காவல் ஆய்வாளர் ராஜதாமரை பாண்டியன், சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் வீரசேகரன் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட, மண்டல, நாடாளுமன்ற செயலாளர்கள் மற்றும் துணை செயலாளர்கள் கூட்டம், கடலூர் சுபா கிராண்ட் ஹோட்டலில் நாளை (24/08/2024) நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் தலைமை தாங்க உள்ளதாக கடலூர் மாநகர வி.சிக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.