India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (10/05/24) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் குருமூர்த்தி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் கல்பனா, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா, நெய்வேலி காவல் ஆய்வாளர் வீரசேகரன் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் 10ம் வகுப்பு தேர்வில் 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.கடலூர் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் பள்ளி மாணவி சங்கீதா 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தார்.அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘காலை 5 மணிக்கு எழுந்து படிப்பேன்.மாதத் தேர்வையும் பொதுத் தேர்வாக எண்ணிப் படித்தேன் என கூறினார்.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.51% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 89.19 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 93.73 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று கடலூர் மாவட்டம் 11 ஆம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 92.63% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 90.08 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 95.39% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
சிதம்பரம் திமுக கலைக் கல்லூரியில் இளம் நிலை முதலாம் ஆண்டு பட்ட ப் பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை வரும் இருபதாம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார். விண்ணப்பம் செய்ய கல்லூரியின் குறியீடு எண்: 1081013, என்றும், மேற்கண்ட உதவிகளுக்கு, 04144-295369 இந்த நண்பரின் தொடர்பு கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர், திட்டக்குடி அருகே மர்ம பொருள் வெடித்ததில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த செல்வராஜ் என்பவரின் கை விரல்கள் துண்டானது. வெள்ளையாக பந்து போல் இருந்த மர்ம பொருளை எடுத்து கையால் அழுத்தியபோது, வெடித்து சிதறியது. அதில், மார்பு, முகப்பகுதியில் ஏற்பட்ட காயத்துடன் செல்வராஜ் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவம் குறித்து போலீசார் இன்று விசாரித்து வருகின்றனர்.
சிதம்பரத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவலின் அடிப்படையில் சிதம்பரம் நகர உதவி ஆய்வாளர் பரணிதரன் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டார். சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே ஒருவர் சந்தேகம் படியாக நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரிக்கையில் விஷ்ணுபுரம் சக்திவேல் கஞ்சா விற்பனை ஈடுபட்டது தெரிய வந்தது. அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (09/05/24) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் சாமிநாதன், சிதம்பரம் உதவி ஆய்வாளர் மகேஷ், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் பிரகஸ்பதி , நெய்வேலி காவல் ஆய்வாளர் அசோகன் மற்றும் பண்ருட்டியில் காவல் ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பள்ளி இடைநின்ற, தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் நாளை (10-ம் தேதி) நடக்கிறது. இதற்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு உயர் கல்வி தொடர்பாக பல்வேறு ஆலோசனை வழங்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் நேற்றைய மழைப்பொழிவு விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, எஸ்.ஆர்.சி குடிதங்கியில் 5 செ.மீட்டரும், அண்ணாமலை நகர், வானமாதேவி,தொழுதூர் ஆகிய பகுதிகளில் 3 செ.மீட்டரும், புவனகிரியில் 2 செ.மீட்டர் மழைப் பதிவானது.
Sorry, no posts matched your criteria.