India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கொடுக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜய். இவருடைய வீட்டில் இன்று (அக்.19) காலை இரண்டு வாலிபர்கள் ஆடுகளை திருடியுள்ளனர். இதனை பார்த்த விஜய், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் பிடித்து தர்ம அடி கொடுத்து நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட சொக்கநாதன், மைக்கேல் அகஸ்டின் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

கடலூர் மக்களே மழை காலங்களில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், உங்களைத் தேடி லைன்மேன் வருவார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

நடுவீரப்பட்டு பகுதியில் அரசின் அனுமதி இன்றி கடைகளில் பட்டாசு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில் போலீசார் இன்று (அக்.19) சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுமார் ரூ.10,000 மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, விற்பனையில் ஈடுபட்ட பிரபாகரன் (54) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.19) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கும் நேரங்களில் மக்கள் திறந்தவெளி மற்றும் மரங்களின் கீழ் நிற்காமல் தவிர்ப்பது நல்லது.

கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சிட்டா அடங்கல், வங்கி கணக்கு ஆதார் அட்டைகளை கொண்டு இ -சேவை மையம் வாயிலாக பயிர் காப்பீடு செய்யலாம். மக்காச்சோளத்துக்கு வருகின்ற 31-ம் தேதியும், சம்பா நெல், பருத்தி, உளுந்துக்கு நவம்பர் 15-ம் தேதியும் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குனர் லட்சுமி காந்தன் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் 37 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

மங்கலம்பேட்டை அடுத்த விஜயமாநகரத்தை சேர்ந்தவர் ராஜவேல் மகள் ராதிகா (35). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் ராதிகாவுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் திருமணம் செய்ய விருப்பம் இல்லாததால் ராதிகா நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மங்கலம் பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

கடலூர் மத்திய சிறைச்சாலையில் நூற்றுக்கணக்கான விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறையில் நேற்று அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 கைபேசிகள், சிம் கார்டுகள் மற்றும் 50 கிராம் கஞ்சா ஆகியவற்றை போலீசார் கண்டெடுத்தனர். இதுகுறித்து சிறை அலுவலர் விக்னேஷ் அளித்த புகாரின் பேரில், முதுதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், மேல்பூவாணிகுப்பம் சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கீடு பெற வரும் நவ.5-ம் தேதிக்குள் குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். சமத்துவபுரத்தில் கட்டப்பட்டுள்ள 100 வீடுகளில் SC/ST- 40%, BC-க்கு 25% , MBC-க்கு 25 % மற்றும் இதர வகுப்பினருக்கு 10 % ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

கடலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.18) இரவு 10 மணி முதல் இன்று (அக்.19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Sorry, no posts matched your criteria.