Cuddalore

News September 27, 2024

தனியார் கல்லூரி பேருந்து மோதி முதியவர் பலி

image

குறிஞ்சிப்பாடி கீழ்பூவாணிகுப்பத்தை சேர்ந்தவர் சிங்காரம்(65). இவர் இன்று சைக்கிளில் புதுச்சத்திரம் அருகில் ஆலப்பாக்கம் – பெத்தாங்குப்பம் மெயின் ரோட்டில் சென்றபோது எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் சிங்காரம் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த அடிபட்டு உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 27, 2024

பெண்ணாடத்தில் 5ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

image

திட்டக்குடி வட்டம் பெண்ணாடத்தில் உள்ள லோட்டஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் 5.10.2024 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 8, 10, 12 மற்றும் கலை கல்லூரி, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் நேற்று தெரிவித்தார்.

News September 26, 2024

கடலூர் மாவட்டத்தில் ரோந்து பணி மேற்கொள்ளும் அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (26/09/2024) கடலூர் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார், சிதம்பரம் உதவி ஆய்வாளர் செந்தில்குமார், விருத்தாசலம் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி, நெய்வேலி உதவி ஆய்வாளர் ராஜாங்கம், சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் சேதுபதி ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 26, 2024

வாக்களிப்பதை வலியுறுத்தி பல்வேறு போட்டிகள் – ஆட்சியர்!

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் கட்டுரை, ஓவியம், ரங்கோலி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளை வரும் நவம்பர் மாதத்திற்குள் முடித்து, போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஜனவரி மாதம் 25ம் தேதி பரிசு வழங்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

News September 26, 2024

பெண்ணாடத்தில் “உயர்வுக்கு படி” சிறப்பு முகாம்

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ‘நான் முதல்வன் உயர்வுக்குப் படி’ வழிகாட்டி நிகழ்ச்சி இன்று 26ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெண்ணாடம் சரோ ரத்தின அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் உயர்கல்வியின் முக்கியத்துவம் தொடர்பான ஊக்குவித்தல், வங்கிக் கடன் மற்றும் அரசின் உதவித்தொகை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News September 26, 2024

கடலூர்: 2360 சாலை விபத்தில் 422 பேர் பலி

image

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு 3117 வாகன விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 580 பேர் பலியான நிலையில் 3783 பேர் படுகாயம் அடைந்தனர். இதேபோல் நடப்பாண்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 2360 சாலை விபத்து நடந்ததில் 422 பேர் பலியானார்கள். இதனால் மாவட்டத்தில் விபத்துகளை தடுக்க காவல்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

News September 25, 2024

வேப்பூர் அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

image

வேப்பூர் அருகே நகர் சேர்ந்த ஆறாம் வகுப்பு படித்துவரும் குமாரவேல் என்பவரது மகன் சிறுவன் ராஜேஷ்குமார் பள்ளி முடிந்து தனது நண்பர்கள் கிராமத்தில் அருகில் உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளார். அப்பொழுது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News September 25, 2024

விருத்தாசலத்தில் பேருந்து வசதி வேண்டி மனு

image

விருத்தாசலம் அடுத்த வேப்பூரிலிருந்து பிஞ்சனூர் வரை புதிய பேருந்துவழித்தடத்தை உருவாக்கி புதிய பேருந்து இயக்கிடக்கோரியும், பிஞ்சனூர் கிராமத்திற்கு ஆழ்துளை கிணறுடன் (ஃபோர்) கூடிய மினி டேங்க் அமைத்து தர கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் மனு அளித்தனர்.

News September 25, 2024

சமுதாய அமைப்பாளர் பணிக்கு கடலூர் ஆட்சியர் அழைப்பு

image

கடலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த 35 வயதுக்குட்பட்டவர்கள் 30.9.2024 அன்றைக்குள் கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும் மேலாளர், நகர்ப்புற வாழ்வாதார மையம்-607001 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News September 25, 2024

கடலூர் விவசாயிகளுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் நடப்பு சிறப்பு மற்றும் ரபி பருவத்தில் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை ஆகியவற்றை கொண்டு, இ-சேவை மையம் மூலம் பயிர் காப்பீடு செய்யலாம். இதில் ஒரு ஏக்கர் சம்பா பயிருக்கு ரூ.548, மக்காச்சோளத்திற்கு ரூ.375, பருத்திக்கு ரூ.412, உளுந்திற்கு ரூ.231-ம் வருகிற 15.11.2024-க்குள் செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

error: Content is protected !!