Cuddalore

News January 19, 2026

கடலூர்: காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் நியமனம்

image

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் புதிதாக 71 மாவட்ட தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகையின் பரிந்துரையின் பேரில், அகில இந்திய பொதுச் செயலாளர் கே.ஜி. வேணுகோபால் வெளியிட்ட அறிவிப்பில், கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்ட தலைவராக பி.ஜே. சித்தார்த்தன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

News January 19, 2026

கடலூர்: 1,379 பேர் மீது வழக்கு பதிவு

image

கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் ஜன.14 முதல் ஜன.17 வரை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மது போதையில் வாகன ஒட்டிய 29 பேர், மொபைல் போன் பேசிய படியே வாகனம் இயக்கிய 33 பேர், ஹெல்மெட் அணியாத 567 பேர், சீர் பெல்ட் அணியாத 10 பேர், இதர விதிமீறல்களில் 720 பேர் என மொத்தம் 1,379 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 19, 2026

கடலூர்: இனி Gpay, Phonepe தேவையில்லை!

image

கடலூர் மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க.

News January 19, 2026

கடலூர்: ரூ.25 கோடிக்கு விற்பனை – புதிய உச்சம்!

image

கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை விமர்சியாக கொண்டாடப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் 135 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் ஜனவரி 14,15 மற்றும் 17 ஆகிய மூன்று நாட்களில் மட்டும், ரூ.25.29 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. இது கடந்த ஆண்டை விட 2 கோடியே 46 லட்சம் அதிகம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆண்டுதோறும் புதிய உச்சம் தொடும் மது விற்பனை கடலூர் மாவட்ட மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

News January 19, 2026

கடலூர்: நடந்து சென்றவர் மீது பைக் மோதி சாவு

image

கீரப்பாளையம் மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் குருசாமி (63) நேற்று கீரப்பாளையத்தில் இருந்து புவனகிரி நோக்கி வெள்ளாற்று பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த பைக் மோதியதில், பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். பைக் ஓட்டிய வினோத் குமார் (25) என்பவர் மீது புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 19, 2026

கடலூர்: டாஸ்மாக் பாரில் கொலை வெறி தாக்குதல்

image

வேப்பூர் அருகே அடரி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் அமர்ந்து நேற்று (ஜன.18) ஈரியூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன், சுபாஷ் ஆகியோர் மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், மது பாட்டிலை உடைத்து ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் இருவரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வேப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 18, 2026

கடலூர்: நடமாடும் உணவகம் அமைக்க மானியம்

image

தமிழக அரசின் தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி பிரிவுகளை சேர்ந்த தொழில் முனைவோருக்கு நடமாடும் உணவக (Food Truck) தொழில் அமைக்க அரசு சார்பில் ரூ.1,24,250 வரை மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.30,000 முதல் 40,000 வரை சம்பாதிக்கலாம். மேலும் தகவலுக்கு கடலூர் மாவட்ட தாட்கோ மேலாளர் அல்லது www.tahdco.com என்ற இணையதளத்தை அணுகவும். இதை ஷேர் செய்யவும்!

News January 18, 2026

கடலூர்: தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை ரெடி!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள்<> இங்கு கிளிக் <<>>செய்து பிப். 4க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News January 18, 2026

கடலூர்: இன்று தை அமாவாசை – இதை மறக்காதிங்க

image

தை அமாவாசையான இன்று, முன்னோர்களுக்கு உங்களால் இயன்றதை கொண்டு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களது பசி தாகம் தீர்ந்து வாழ்த்துவார்கள் என்பது ஐதீகம். இதனை செய்தால் வீடுகளில் மகிழ்ச்சி பொங்கி, சுப காரியத்தின் தடைகள் விலகி, சொத்துகள் சுகம் கிடைக்கும், நோய் நோடிகள் அடையும் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் இன்று மாலை, அருகில் உள்ள கோயிலுக்கு சென்று, நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். இதனை SHARE பண்ணுங்க.!

News January 18, 2026

கடலூர்: கூட்டு பட்டா, பட்டாவில் சிக்கலா?

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர் கூட்டு பட்டா, விற்பனை சான்றிதழ், நில வரைபடம், சொத்து வரி ரசீது, மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம் ஆகியவற்றுடன் தாலுகா அலுவலகம் (அ) இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அலுவலர்கள் ஆய்வு செய்த பிறகு தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்யுங்க.

error: Content is protected !!