India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

கடலூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

ஆல்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் நேற்று முதியவர் ஒருவர் தண்ணீரில் இறங்கினார். அப்போது அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால், அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரதிமங்கலம் பகுதியைச் சேர்ந்த தனசேகர்(75), என்பதும் பிள்ளைகள் சரியாக கவனிக்காததால் மனமுடைந்து, தற்கொலை முயற்சித்ததும் தெரிய வந்தது. இதையெடுத்து, போலீசார் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

தமிழ்நாடு சுகாதார துறையில், காலியாக உள்ள 999 செவிலியர் உதவியாளர் (தரம்-2) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 999
3. வயது – 18 – 44
4. சம்பளம்: ரூ.15,700-ரூ.58,100
5. கல்வித்தகுதி: 10th & Nursing Assistants Course
6. கடைசி தேதி: 08.02.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

கடலூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு<

கடலூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு<

கடலூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு<

தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தொழிற்பழகுநராக சேர்க்கை செய்திட மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் கடலூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகத்தில் வருகின்ற 21.01.2026 அன்று காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. இதில், மாவட்டத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட அரசு மற்றும் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பண்ருட்டி அருகே சிறுத்தொண்டமாதேவியை சேர்ந்தவர் தனபால் மனைவி அஞ்சலை (75). இவர் வீட்டின் அருகே குளிருக்கு இதமாக தீமூட்டி குளிர்காய்ந்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக அவர் சேலையில் தீப்பற்றி எரிந்து படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனை சேர்க்கப்பட்ட இவர், சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்தார், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கடலூர் மாவட்டம் மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ்குமார். இவர் 17 வயது சிறுமியை காதலித்து கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் மருத்துவர்களின் அளித்த தகவலால், பண்ருட்டி மகளிர் போலீசார், தினேஷ் குமார் மீது நேற்று(ஜன.19) போக்சோ வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.