India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் அடுத்த எஸ்.என் சாவடி நியாய விலை கடையில் ரேஷன் பொருட்கள் வாங்க அப்பகுதி பொதுமக்கள் வந்திருந்தனர். இந்நிலையில் இன்று இட்லி அரிசி, துவரம்பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் இருப்பு இல்லை என்று கூறி வழங்கப்படவில்லை. சமீப காலமாக தினமும் ஏதேனும் ஒரு காரணம் கூறி பல பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படுவதில்லை என்று புலம்பியவாறு ரேஷன் வாங்க வந்த பொதுமக்கள் திரும்பி சென்றனர்.
கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு கோடைக்கால நீச்சல் பயிற்சி வகுப்பு கடந்த 14ஆம் தேதி துவங்கியது. இதில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று நீச்சல் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து 13 நாட்கள் நடைபெற்று வந்த இந்த நீச்சல் பயிற்சி வகுப்பு நாளை 26ம் தேதி நிறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூரில் பிரபல திரையுலக நட்சத்திரங்களான அமுதவாணன், KPY பாலா, நிஷாந்த் கவின் மற்றும் பின்னணி பாடகர்கள் ஹரிப்பிரியா, திவாகர் பங்கு பெறும் ஸ்டார் நைட் லைவ் ஷோ நாளை 26 ஆம் தேதி மாலை சென் ஜோசப் மெயின் கேம்பஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் லைவ் மியூசிக், டி.ஜே, டான்ஸ் மற்றும் மிமிக்ரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. இது தொடர்பான விளம்பர பேனர்கள் கடலூரில் பல்வேறு பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகரில் தமிழ்நாடு நான்காவது கூட்டு தொழில்நுட்ப கம்பெனி என்சிசி சார்பில் நேற்று வருடாந்திர கூட்டு பயிற்சி மற்றும் தல்சாணிக் தேர்வு முகாம் ஆகியவை தொடங்கியது. ஜூன் 1 தேதி வரை நடைபெறும் இம் முகாமின் கட்டுப்பாட்டு அதிகாரியாக தமிழ்நாடு நான்காவது கூட்டு தொழில் நுட்ப கம்பெனியின் கட்டுப்பாட்டு அதிகாரி கர்னல். வாசுதேவ நாராயணன் சேனா மெடல் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (24/05/24) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் கணபதி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் கல்பனா, விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் முருகேசன், நெய்வேலி காவல் ஆய்வாளர் அசோகன் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் சாராயம், கஞ்சா, மது விற்பனை குறித்தும், கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் , போலி மதுபானம் விற்பனை செய்வோர், மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்கள் பற்றிய தகவல்களை காவல்துறைக்கு 7418846100 மற்றும் 04142 -284353 என்ற காவல் உதவி எண்களில் தகவல் தெரிவிக்கலாம். இந்த புகார் எண்ணுக்கு வரும் புகார்களின் அடிப்படையில் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எஸ்.பி. ராஜாராம் தெரிவித்துள்ளார்.
வடலூர் சன்மார்க்க சத்திய தருமசாலையின் 158வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கடலூர் கடற்கரை சாலையில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் இன்று காலை முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்று யோகாசன பயிற்சி மற்றும் இயற்கை உணவு குறித்து சிறப்பு நடைபெற்றது.இந்த சொற்பொழிவு ஓய்வு பெற்ற பெரியார் அரசு கல்லூரி பேராசிரியர் அர்த்தநாரி நடத்தினார் பின்பு அங்கிருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்கப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடலூரில் கோடை மழை பெய்து வருகிறது. அதனால் மின் விபத்து ஏற்படுவதை தவிர்க்க பொதுமக்கள் மின்சார உபகரண பெட்டிகளை தொட கூடாது. மின்கம்பத்தில் ஆடு, மாடுகளை கட்டக்கூடாது. மின்கம்பிகள் அறுந்து விழுந்தாலோ , சேதமடைந்த மின்கம்பம் மற்றும் தாழ்வாக செல்லும் மின்கம்பி, சேதமடைந்த ஸ்டே கம்பிகள் இருந்தாலும் 9498794987 என்ற அரசின் கட்டணமில்லா சேவை எண்ணில் தெரிவிக்கலாம் என கடலூர் மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திற்கு நள்ளிரவு 12 மணி அளவில் எஸ்.பி. ராஜாராம் திடீரென வந்து பேருந்து நிலையம் முழுவதும் சோதனை மேற்கொண்டார்.அப்போது பேருந்து நிலையத்தில் தேவையின்றி சுற்றித்திரிந்த இளைஞர்களை எச்சரித்து அனுப்பி வைத்தார்.எஸ்.பி.யுடன் வந்திருந்த அதிரடிப்படை போலீசார் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.பேருந்து நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.
Sorry, no posts matched your criteria.