India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிதம்பரம் தாலுகா போலீசார் பாலூத்தாங்கரை பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் மது பாட்டில்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த கலைச்செல்வி என்பவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிப்பணி தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய கோட்டங்களில் உள்ள சுமார் 3 லட்சம் கால்நடைகளுக்கும்,ஜூன் மாதம் 10-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரை தடுப்பூசி போடப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று (ஜூன்.05) பெய்த மழையின் அளவு விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பரங்கிப்பேட்டையில் 7 செ.மீட்டரும், பெலாந்துறை, விருதாச்சலம் ஆகிய பகுதிகளில் 6 செ.மீட்டரும், குப்பணதம், கோதைச்சேரி ஆகிய பகுதிகளில் 5 செ.மீட்டரும், வடக்குத்து, சேது தோப்பு, புவனகிரி, செய்வேலி ஆகிய பகுதிகளில் 3 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடை வைத்துள்ள உரிமையாளர்களிடம் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.இதில் மாநகர ஆணையாளர் காந்தி ராஜ் கூறுகையில், தேவனாம்பட்டினம் கடற்கரை புதுப்பிக்கும் பணி தொடங்க உள்ளதால் அங்கு கடை வைத்துள்ள அனைவரும் அதே பகுதியில் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறினார்.
சிதம்பரம் முத்தையா நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் 2-ஆம் ஆண்டு விழாவையொட்டி, கலச விளக்கு வேள்வி பூஜை, சமுதாயப்பணி , ஆன்மீக சொற்பொழிவு ஆகியவை நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்வுக்கு, சக்திப்பீட தலைவர் கோபி தலைமை வகித்து கலச விளக்கு வேள்வி பூஜையை தொடங்கி வைத்தார். அருளானந்தம், டி.எஸ்.எஸ்.பாலகுமார், சித்த மருத்துவர் அர்ச்சுனன் ஆகியோ முன்னிலை வகித்தனர்.
கடலூர், தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கல்லூரியில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் வெற்றி பெற்றதை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை பத்திரமாக ஏற்றி அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சரிபார்த்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் இன்று காலை கொண்டுவரப்பட்டு கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளிக் கடற்கரையில் மூலதன மானிய திட்ட நிதியின் கீழ் ரூ.4.98 கோடி மதிப்பீட்டில் பூங்கா உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தும் பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண் தம்புராஜ் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடலூர் அடுத்த செம்மங்குப்பத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.சரண்யா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (05.06.2024) இரவு 7 மணி வரையும் கடலூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களுக்கு இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தல்:
காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்- 4,55,053 வாக்குகள்
தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து- 2,69,157 வாக்குகள்
பாமக வேட்பாளர் தங்கர் பச்சான்- 2,05,244 வாக்குகள்
நாதக வேட்பாளர் மணிவாசகன்- 57,424 வாக்குகள்
Sorry, no posts matched your criteria.