Cuddalore

News January 27, 2026

கடலூரில் தடை: காவல்துறை அறிவிப்பு

image

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று (ஜன.27) முதல் ஜன.30-ம் தேதி வரை தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அண்ணா விளையாட்டு மைதானத்தை தேர்வுகள் முடியும் வரை பொதுமக்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி போன்றவற்றிற்கு உபயோகப்படுத்த வேண்டாம் என்று கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News January 27, 2026

கடலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜன.26) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.27) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 26, 2026

கடலூர்: திருமணத் தடை நீக்கும் பாண்டியநாயகர் கோயில்

image

சிதம்பரம் நடராஜர் கோயில் வடக்கு கோபுரம் அருகே வள்ளி தெய்வானை சமேத பாண்டியநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிறப்பு பிரார்த்தனையாக பல்வேறு காரணங்களால் தடைபட்டு வரும் திருமணங்கள் நடைபெற பிரார்த்தனை செய்யப்படுகிறது. திருமணம் கைகூடிய உடன் இக்கோயிலிலேயே திருமணமும் நடைபெறுகிறது. கடலூர் மாவட்டத்தில் திருமண தடை நீக்கும் முதன்மை கோயிலாக மக்களால் கருதப்படுகிறது. உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும் !

News January 26, 2026

117 காவலர்களுக்கு முதலமைச்சர் காவலர் பதக்கம்!

image

கடலூரில் இன்று 77வது குடியரசு தின விழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் கடலூர் மாவட்ட 117 காவலர்களுக்கு முதலமைச்சர் காவலர் பதக்கம், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார். இந்நிகழ்வில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

News January 26, 2026

கடலூர்: வங்கி வேலை.. ரூ. 48,000 சம்பளம்!

image

யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள Generalist and Specialist Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 173
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.48,480 – 93,960/-
5. கல்வி தகுதி: B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA
6. கடைசி தேதி: 02.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 26, 2026

கடலூர்: ஆதாரில் திருத்தம் செய்வது இனி ரொம்ப ஈஸி.!

image

கடலூர் மக்களே, ஆதார் அட்டையில் உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>’இங்கே கிளிக்’<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க!

News January 26, 2026

கடலூர்: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

கடலூர் மாவட்ட மக்கள் இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

News January 26, 2026

கடலூர் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழை

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜனவரி 26) காலை 8.30 மணி நிலவரப்படி, பரங்கிப்பேட்டை 28 மில்லி மீட்டர் மழை, கொத்தவச்சேரி 25 மி.மீ மழை, குப்பநத்தம் 17 மில்லி மீட்டர் மழை, சிதம்பரம் 16.5 மில்லி மீட்டர் மழை மற்றும் புவனகிரியில் 16 மில்லி மீட்டர் மழை என மாவட்டம் முழுவதும் 286.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

error: Content is protected !!