India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் அருகே காரைக்காடு பகுதியில் பச்சைவாழியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் லில் வேறெங்கும் காணாத வகையில், ஒரே கருவறையில் 18 அம்மன்களை தரிசனம் செய்யலாம். வெள்ளிக்கிழமைகளில் திருமண தடை நீக்க இங்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. கோயிலை சுற்றிலும் அனைத்து காவல் தெய்வங்களுக்கும் சுதை சிற்பங்கள் இருப்பது சிறப்பம்சமாகும். இக்கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமையானது எனக் கூறப்படுகிறது. SHARE IT!

கடலூர் மக்களே, கலைஞர் உரிமை தொகை ரூ.1000 வரலையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள்<

கடலூர் மாவட்டத்தில், குடியரசு தினத்தன்று ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காமல் நிறுவனங்கள் ஏதேனும் செயல்படுகிறதா என தொழிலாளர் துறை உதவி ஆணையர் ஞானப்பிரகாசம் தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். இதில் விதிமுறைகளை மீறி இயங்கிய 51 நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு தகுதியான நுகர்வோருக்கு ஒவ்வொரு ஆண்டும் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்குகிறது. அந்த மானியம் உங்களுக்கு வரவில்லையா?. உங்கள் எரிவாயு வழங்குநரின் இணையதளத்திற்கு செல்லுங்கள். அங்கு Check DBTL Status (அ) Subsidy Status என்பதை க்ளிக் செய்து நுகர்வோர் எண், மொபைல் எண்ணை உள்ளிட்டு மானிய வரவை சரிபார்க்கலாம். மேலும் உங்கள் எரிவாயு நிறுவனத்தின் Toll-Free எண்ணிற்கும் அழைக்கலாம். SHARE NOW.

பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டையை சேர்ந்தவர் செங்கேணி மனைவி செல்லம்மாள் (70). இவர் நேற்று கண்டரக்கோட்டை மெயின் ரோட்டில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று செல்லம்மாள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்லம்மாள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

கடலூர் முதுநகரில் நேற்று முன்தினம் இரவு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிதம்பரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் முதியவர் மீது மோதியது. இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து இறந்த முதியவர் யார்? என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

கடலூர் முதுநகரில் நேற்று முன்தினம் இரவு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிதம்பரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் முதியவர் மீது மோதியது. இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து இறந்த முதியவர் யார்? என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

கடலூர், கொமத்தான்மேடு அருகே தென்பெண்ணையாற்றில் நேற்று 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது. தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கடலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனையடுத்து இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.