Cuddalore

News June 15, 2024

தேசிய நெடுஞ்சாலை பணி – ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் – சிதம்பரம் – நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை சாலை பணிகள் நடைபெறுவதை கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் இன்று (ஜூன் 15) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது சாலை பணிகளை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் செய்ய வேண்டும் என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை துறை செயற்பொறியாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News June 15, 2024

கடலூரில் குறைகேட்பு முகாம் நடைபெற்றது

image

கடலூர் தாலுகா அலுவலகத்தில் பொதுவினியோகத்திட்ட குறைகேட்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு குடிமைப்பொருள் தனி தாசில்தார் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 30க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தனர்.

News June 15, 2024

அரசு கல்லூரியில் பழங்குடி இன மாணவர் சேர்ப்பு

image

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் 2024-25ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த 10-ம் தேதி முதல் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று (ஜூன் 15) நடந்த சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரே ஒரு மாணவர் மட்டுமே சேர்ந்துள்ளார். இந்த மாணவருக்கு கல்லூரி முதல்வர் ரா.ராஜேந்திரன் சேர்க்கை ஆணையை வழங்கினார்.

News June 15, 2024

கடலூர் மாவட்டத்தில் வெப்பநிலை நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீண்டும் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் நேற்று கடலூர் 36 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 37 டிகிரி செல்சியஸ், புவனகிரி 37 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 37 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 38 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 39 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 38 டிகிரி செல்சியஸ் மற்றும் பண்ருட்டியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது

News June 15, 2024

சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை கால நீடிப்பு

image

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் PG Diploma 4, Pharmacy படிப்புகள், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்புகள் அனைத்து கடல் அறிவியல் படிப்புகள், இசைத்துறை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 30 ஆம் தேதி வரை சமர்பிக்கலாம் எனவும் மேலும் விவரங்களுக்கு www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

News June 14, 2024

கடலூர்: மாவட்ட கிரிக்கெட் போட்டி நாளை துவக்கம்

image

கடலூரில் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட கிரிக்கெட் அக்காடமி கோப்பைக்கான மாவட்ட அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை துவங்குகிறது. தினந்தோறும் காலை 8.30 மணிக்கும், மதியம் 12.30 மணிக்கு என 2 போட்டிகள் நடைபெற உள்ளன. இவை அனைத்தும் நாக் அவுட் முறையில் நடத்தப்படுகின்றன. வருகிற 22-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டியில் மாவட்டத்தில் உள்ள 16 அணிகள் கலந்து கொள்கின்றன.

News June 14, 2024

கடலூர் கோர்ட்டில் போக்குவரத்து துறை அமைச்சர் ஆஜர்

image

கடலூரில் கடந்த 2015 ஆம் ஆண்டு மணல் குவாரி மூடும் போராட்டத்தில் நடந்த தடியடி வழக்கில் தொடர்புடைய போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கடலூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அப்போது திமுக மாநகர செயலாளர் ராஜா மற்றும் வழக்கறிஞர் பிரிவு அணியினர் அருகில் இருந்தனர். பின்பு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மாதம் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

News June 14, 2024

கடலூர்: அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை

image

கடலூரில் இன்று காலை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் வருகிற செவ்வாய்கிழமைக்கு பிறகு தமிழகத்தில் ஓடினால் கண்டிப்பாக பறிமுதல் செய்யப்படும். மீண்டும் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களாக மாற்றும் வரை பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்படாது என்றார்.

News June 14, 2024

கடலூர் மாவட்ட முழு வெப்பநிலை நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீண்டும் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று கடலூர் 36 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 37 டிகிரி செல்சியஸ், புவனகிரி 37 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 37 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 38 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 38 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 38 டிகிரி செல்சியஸ் மற்றும் பண்ருட்டியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது

News June 14, 2024

கடலூர் மக்களே நாளை மின்தடை

image

கடலூர், செம்மங்குப்பம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன் 15) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் காலை 9 மணி முதல் 4 மணிவரை, செம்மங்குப்பம், பெரியக்குப்பம், காரைக்காடு, கருவேப்பம்பாடி, சிப்காட் பகுதி, குடிகாடு, பூண்டியாங்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!