Cuddalore

News June 16, 2024

சிதம்பரம் ஈகை திருநாளுக்கு தொழுகைக்கு இடம் தயார்

image

சிதம்பரத்தில் நாளை(ஜூன் 17) திங்கட்கிழமை ஹஜ் பெருநாள் தொழுகை
ஈத்கா மைதானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக சிதம்பரம் நகராட்சி சார்பாக இயந்திரங்கள் மூலம் பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டது. சிதம்பரத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கு தொழுகைக்கு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 6.15 மணிக்கு தக்பீர்
காலை 6.30 மணிக்கு பயான்
காலை 7.00 மணிக்கு தொழுகை நடைபெறும்.

News June 16, 2024

சிதம்பரம் சப் கலெக்டர் வாய்க்கால்களை தீர்வாரும் பணி ஆய்வு

image

சிதம்பரம் நீர்வளத்துறை கொள்ளிடம் வடிகால் கூட்டம் மூலமாக காவல் டெல்டா சிறப்பு திருவாரூர் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை நேற்று சிதம்பரம் சப் கலெக்டர் ரேஷ்மி ராணி ஆய்வு செய்தார். இதில் சிவராம சுந்தரி ஓடை, பாசிமுத்தா ஓடை கவரப்பட்டு வாய்க்கால் அனைத்து பணிகளையும் சிறப்பாக நடைபெறுகிறதா என்று அதிகாரியிடம் ஆய்வு மேற்கொண்டார். 

News June 16, 2024

கடலூரில் கடும் போக்குவரத்து பாதிப்பு

image

கடலூர் அண்ணா பாலத்தில் கடந்த 2 நாட்களாக தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜூன் 16) அதிகாலை ஜவான் பவன் எதிரில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. காலை நேரம் என்பதால் ஜவான்பவன் அருகில் உள்ள காய்கறி கடைக்கு வரும் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டுள்ளதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

News June 16, 2024

சிதம்பரத்தில் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கடன்

image

சிதம்பரம் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கடன் மேளா நேற்று நடைபெற்றது. இணைப்பதிவாளர் கோமதி தலைமை தாங்கினார். பொது மேலாளர் விஜயகுமார், உதவி பொது மேலாளர், பணியாளர்கள் முன்னிலை வகித்தனர். கடன் மேளாவில் பொதுமக்கள் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு மகளிர் குழு ஊதியம் பெறும் ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்டோருக்கு 7 கோடி கடனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

News June 15, 2024

கடலூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் குருமூர்த்தி, சிதம்பரம் உதவி ஆய்வாளர் சங்கர், விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி, நெய்வேலி உதவி ஆய்வாளர் ஆதி மற்றும் சேத்தியாத்தோப்பில் காவல் ஆய்வாளர் ராபின்சன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 15, 2024

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

image

காதல் திருமணத்திற்கு ஆதரவாக இருந்ததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்ட குழு அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்து இன்று கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாநகர செயலாளர் அமர்நாத் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மருதவாணன், கருப்பையன், ஆளவந்தார், பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

News June 15, 2024

கடலூர் பேருந்து நிலையத்தில் இடையே பிரச்சனை

image

கடலூர் பேருந்து நிலையத்தில் நேரம் பிரச்சனை குறித்து தனியார் மற்றும் அரசு பஸ் டிரைவர்களுடைய பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து கடலூர் பேருந்து நிலையத்தில் அரசு பணிமனை ஊழியர்கள் சிலர் இருந்துள்ளனர். அவர்களும் அரசு பேருந்து ஓட்டுனரும் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து புற காவல் நிலையத்தில் இருந்த போலீசார் சமாதானம் செய்தனர்.

News June 15, 2024

முடிவடைந்த மீன்பிடி தடைக்காலம் – கடலுக்குள் இறங்கிய மீனவர்கள்

image

மீன்பிடி தடைக்காலம் கடந்த 61 நாட்கள் கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றுடன் (ஜூன் 14) மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்தது. இந்தநிலையில், இன்று அதிகாலை முதல் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். முன்னதாக, மீனவர்கள் தங்களது படகுகளுக்கு பூஜை செய்து மாலை அணிவித்து கடல் மாதாவை வணங்கி கடலுக்குள் சென்றனர்.

News June 15, 2024

இசைப் பள்ளியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

image

கடலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2024-25ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகை ரூ.400 மற்றும் இலவச பயண அட்டை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படும். படிப்பு நிறைவு செய்தவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். ஆகவே மாணவர்கள் இசைப்பள்ளியில் சேர்ந்து பயன் பெறுமாறு ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

News June 15, 2024

மகளிருக்கு இலவச தையல் தொழிற்பயிற்சி

image

கடலூர் இந்தியன் வங்கி மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் மகளிர் இலவச தையல் தொழிற்பயிற்சி 30 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான நேர்காணல் வரும் 22ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இது தொடர்பான முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு 04142 – 796183 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!