Cuddalore

News January 30, 2026

கடலூர்: ரோந்து பணி அதிகாரிகள் முழு விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜன.29) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.30) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 29, 2026

வடலூர் தைப்பூச திருவிழா; சிறப்பு ரயில் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் வருகின்ற பிப்ரவரி 1 ஆம் தேதி தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பிப்ரவரி 1, பிப்ரவரி 2, பிப்ரவரி 3 ஆகிய 3 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் விருத்தாசலம், ஊத்தாங்கள்மங்கலம், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவித்துள்ளது.

News January 29, 2026

கடலூர்: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 29, 2026

கடலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

கடலூர் மாவட்ட மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 29, 2026

கடலூர்: 10,000 பேர் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம்

image

கடலூர் மாவட்டத்தில் 7 லட்சத்து 85 ஆயிரத்து 547 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், 447 இலங்கை தமிழர் அட்டைதாரர்கள் என மொத்தம் 7 லட்சத்து 85 ஆயிரத்து 994 ரேஷன் கார்டுதாரர்களுக்கு 1,458 ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 1 ஆண்டில் புதிதாக ரேசன் கார்டு கேட்டு சுமார் 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக குடிமைப் பொருள் அதிகாரி தெரிவித்துள்ளார்.

News January 29, 2026

கடலூர்: வங்கியில் ACCOUNT வைத்துள்ளீர்களா?

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

News January 29, 2026

கடலூர்: கடலில் மூழ்கும் பிச்சாவரம்?

image

பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள், அற்புத அலையாத்தி மரங்கள் நிறைந்த, இந்தியாவின் ஓர் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலமாகும். இந்நிலையில் தமிழக கடலோர மாவட்டங்கள் எதிர்கொள்ளும் திடீர் வானிலை மாற்றம் மற்றும் புவி வெப்ப மயமாதல் உள்ளிட்ட காரணங்களால் கடல் மட்டம் உயர்ந்து வரும் 2100-க்குள், சுமார் 413 ஹெக்டேர் பரப்பளவிலான அலையாத்தி காடுகள் நீரில் மூல்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 29, 2026

கடலூர்: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது!

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>.
இந்த தகவலை SHARE பண்ணுங்க

News January 29, 2026

கடலூர்: இளைஞருக்கு நேர்ந்த சோகம்

image

பண்ருட்டி அடுத்த அக்கடவல்லி பகுதியை சேர்ந்தவர் கொத்தனார் ராம்குமார் (32). இவர் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

News January 29, 2026

கடலூர்: இளைஞருக்கு நேர்ந்த சோகம்

image

பண்ருட்டி அடுத்த அக்கடவல்லி பகுதியை சேர்ந்தவர் கொத்தனார் ராம்குமார் (32). இவர் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!