India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிதம்பரம் அடுத்த அண்ணாமலை நகர் வடகிருப்பை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் இரு தினங்களுக்கு முன்பு இரவு அண்ணாமலை நகர் திருவக்களம் சந்தை பழம் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது மெயின் ரோடு தெருவை சேர்ந்த முருகானந்தம் கோபால் இருவரும் முன்விரோத காரணமாக ரஞ்சித் குமாரை நேற்று தாக்கியுள்ளனர். ரஞ்சித் குமார் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து முருகானந்தம் கோபால் இருவரையும் கைது செய்தனர்.

காட்டுமன்னார்கோயில் அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. கடலூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள இந்த வீராணம் ஏரி பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை வீராணம் ஏரியின் ஷட்டர் திடீரென உடைந்தது. இதுபற்றி அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறாமல் இருக்க ஜேசிபி மூலம் மணல் மூட்டைகளை அடுக்கி சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காக அரிய தொண்டு செய்தவர்கள் 2024 ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் அரசு விருது பெற www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் 25.11.2024-க்குள் நேரில் அல்லது தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

மழை மற்றும் புயல் காரணமாக நீண்ட நாட்களாக பராமரிப்பில்லாத விளம்பர பதாகைகள் கீழே விழுந்து விபத்தினை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. அனுமதியின்றி விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டால் விளம்பர பதாகைகள் வைப்பவர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதேபோல் கடலூர் மாவட்டத்திலும் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று இரவு 7 மணி வரை கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய 15.11.2024 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாநில அரசு, மத்திய அரசை பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் அளித்திட கோரிக்கை விடுத்தது. அதன்படி சம்பா நெல் பயிருக்கு பயிர் காப்பீடு கால அவகாசத்தினை 30.11.2024 வரை நீடிப்பு செய்துள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை (நவம்பர் 20-ம் தேதி) ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், மக்களின் தேவைகள் குறித்து கள ஆய்வு மற்றும் அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேலும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார்.

கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்த நிலையில் இரண்டு நாட்களாக பல இடங்களில் மழை இல்லை. இந்த நிலையில் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் வரும் 25ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் கடலூர் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 152 விற்பனையாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையவழி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்முக தேர்வு 25.11.2024 முதல் 05.12.2024 வரை நடைபெற உள்ளதாக கடலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு மைய தலைவர் தெரிவித்துள்ளார். SHARE IT

காட்டுமன்னார்கோயில் எஸ்.ஐ. மணிகண்டன் மற்றும் போலீசார் இன்று காட்டுமன்னார்கோயில் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த வடக்கு கொளக்குடியை சேர்ந்த பக்கீர் மைதீன் (58) என்பவரை போலீஸர் பிடிக்க முயன்றபோது பக்கீர் மைதீன், எஸ்.ஐ. மணிகண்டனை அசிங்கமாக திட்டி கத்தியால் தாக்கினார். உடனே சக போலீசார் மடக்கி பிடித்து பக்கீர் மைதீனை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.