India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000, நெற்பயிர்களுக்கு ஹெக்டருக்கு ரூ.17,000, உயிரிழந்த மாட்டுக்கு ரூ.37,500, 33% பாதிப்புக்குள்ளான வீடுகளுக்கு ரூ.17,000, முழுவதும் சேதமடைந்த வீடுகளுக்கு புதிய விடு கட்டித்தரப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். SHARE IT

கடலூர் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் நேர்முகத் தேர்வு இன்று (03.12.2024) நடைபெறவிருந்தது. இந்த நிலையில் இன்று நடைபெற இருந்த நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் நேர்முகத் தேர்வு வரும் (05.12.2024) வியாழக்கிழமை மதியம் 2 மணியளவில் நடைபெற உள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் அறிவித்துள்ளார்.

கடலூர் மாநகரில் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்படி பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை கடலூர் வருகை தர உள்ளார். அப்போது அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறிஞ்சி நகர், குண்டு சாலை உள்ளிட்ட பகுதிகளில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்க உள்ளார்.

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிசம்பர் 10ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வங்கக்கடலில் உருவான ஃபென்ஜல் புயல் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கடலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (டிச.03) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். SHARE IT

கடலூர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக தற்போது வரை 25 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. 9 கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடலூரில் 1 நபரும், குறிஞ்சிப்பாடியில் 2 நபர்கள் என 3 நபர்கள் லேசான காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 127 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

தெற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் நேற்று (01.12.2024) கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் 17 நிவாரண முகாம்களில் தற்போது வரை 703 நபர்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

ஃபெஞ்சல் புயல் காரணமாக தொடர் மழை பெய்து வருவதால் திங்கள்கிழமை தோறும் கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நாளை (02.12.2024) திங்கட்கிழமை ரத்து செய்யப்படுகிறது. இந்தத் தகவலை கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (01/12/2024) தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான ஃபென்ஜல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் தேங்கி பல்வேறு பொதுமக்கள் பள்ளி கல்லூரிகளில் முகாம்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (டிச.02) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்த செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். SHARE IT

வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்த புயலானது தற்போது மாமல்லபுரம் அருகே கரையை கடந்து வரும் நிலையில், கடலூர் மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.