Cuddalore

News December 14, 2024

5 முகாம்களில் 382 நபர்கள் தங்க வைப்பு- ஆட்சியர்

image

விருத்தாசலம், காட்டுமன்னார்கோயில், திட்டக்குடி பகுதிகளில் 5 இடங்களில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் 382 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீமுஷ்ணம் வட்டம், கோவிந்தநல்லூர் ஊராட்சியில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதியில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு ஆர்.சி. உதவி பெறும் நடுநிலைப்பள்ளி நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News December 13, 2024

பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த எம்எல்ஏ, ஆட்சியர்

image

காட்டுமன்னார்கோயில் அடுத்த கோவிந்தநல்லூர் கிராமத்தில் கனமழையால் பாதிப்படைந்து வீடுகளில் தங்க முடியாமல் அருகில் உள்ள பள்ளி கட்டிடத்தில் தங்கியுள்ள கிராம மக்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் மற்றும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தனர்.

News December 13, 2024

பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

image

கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க

News December 13, 2024

கடலூர்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினம் தோறும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் அமர்நாத், சிதம்பரம் காவல் ஆய்வாளர் கலையரசன், விருத்தாசலம் உதவி ஆய்வாளர் ஜெயந்தி, பண்ருட்டி உதவி ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் கோபிநாத் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 12, 2024

வேப்பூர் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

கல்வராயன் மலைத் தொடர்ச்சியில் பெய்து வரும் கனமழை காரணமாக கோமுகி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளதால், கோமுகி அணையிலிருந்து 2000 கன அடி உபரி நீர் ஆற்றின் மிகை போக்கி மற்றும் அணையின் பிரதான ஷட்டர் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டத்திற்குட்பட்ட கொத்தனூர் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 12, 2024

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம், வரும் 14ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இதில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் மற்றும் முதியோர், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் உள்ளிட்டோர் தங்கள் தேவைகளை மனுவாக சமர்ப்பிக்கலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News December 12, 2024

கடலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

image

தொடர் கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் இன்று (டிச.12) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News December 11, 2024

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

image

குறிஞ்சிப்பாடி வட்டத்திற்குட்பட்ட குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப் பள்ளி, கங்கைகொண்டான் மற்றும் குள்ளஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் திட்டப் பணிகள், கங்கைகொண்டான் அங்கன் வாடிமையம் கட்டுமானப் பணிகள் நடைபெறுவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News December 11, 2024

கடலூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கம் 

image

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கடலூர் வழியாக வரும் 13ம் தேதி மட்டும் வண்டி எண் (06147) திருச்சி – வேலூர் கண்டோன்மென்ட் சிறப்பு ரயில் அறிவிப்பு. அதன்படி திருச்சியிலிருந்து 13ம் தேதி காலை 8 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சிதம்பரம் காலை 10.46 மணிக்கும், திருப்பாதிரிப்புலியூர் 11.18 மணி, பண்ருட்டி 11.40 மணிக்கு வந்து திருவண்ணாமலைக்கு மதியம் 1.20க்கு சென்றடைய உள்ளது.

News December 11, 2024

என்.எல்.சி யில் வேலை வாய்ப்பு

image

நெய்வேலியில் அமைந்துள்ள NLC India Limited இல் 7  பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் ஆனது. இந்த வேலை வாய்ப்பிற்கான பதவி, சம்பளம், வயது வரம்பு, கல்வித் தகுதி, விண்ணப்பதாரர்கள் NLC India Limited, நெய்வேலின் இணையதளத்தில் https://www.nlcindia.in/ 11.12.2024 காலை 10.00 மணி முதல் 30.12.2024 மாலை 05.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!