Cuddalore

News February 3, 2026

கடலூர்: பாதி வழியில் பெட்ரோல் காலியா ?

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <>’Fuel@Call’ என்ற <<>>ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிப்பொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News February 3, 2026

கடலூர்: 70% மானியத்தில் பம்புசெட் வேண்டுமா?

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரியநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு <>உழவன் <<>>App மூலமாக விண்ணப்பித்து, பெயரை ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. இந்த 70 சதவீதத்தில், 40 % முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்.

News February 3, 2026

கடலூர்: வாகன ஏலம் அறிவிப்பு – எஸ்.பி

image

கடலூர் மாவட்டத்தில் மது கடத்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளதாக எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் வரும் பிப்.12, காலை 10 மணியளவில் 79 வாகனங்கள் பொது ஏலம் விடப்படும் என்றும், இதில் கலந்து கொள்ள விரும்புவோர் பிப்.10-ம் தேதி முன் வைப்பு தொகை செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என எஸ்.பி தெரிவித்துள்ளார்.

News February 3, 2026

‘அண்ணா புகழைப் போற்றி வணங்குகிறேன்’ – சிதம்பரம் MLA

image

‘தமிழன்னையின் தவப்புதல்வன், கடமை கண்ணியம் கட்டுப்பாடு காத்த தமிழ் தாயின் தலைமகன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 57 வது நினைவு தினத்தில் அவர்தம் புகழை போற்றி வணங்குகிறேன்’ என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கடலூர் மாவட்ட செயலாளரும், சிதம்பரம் எம்எல்ஏவுமான கே.ஏ. பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News February 3, 2026

கடலூர்: 71,000 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம்

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய 9 தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 71 ஆயிரத்து 290 பேர் விண்ணப்பித்துள்ளதாக கடலூர் மாவட்டம் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News February 3, 2026

கடலூர்: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

image

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் கடலூர் மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார்.

News February 3, 2026

கடலூர்: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

image

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் கடலூர் மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார்.

News February 3, 2026

கடலூர்: WhatsApp-ல் சான்றிதழ்கள்! HI சொல்லுங்க

image

கடலூர் மாவட்ட மக்களே, இனி இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்றவற்றை பெற அரசு அலுவலகங்கள் அல்லது இ-சேவை மையங்களுக்கு நேரில் அலைய வேண்டிய அவசியமில்லை. இனி அவற்றை வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை SHARE பண்ணுங்க.

News February 3, 2026

கடலூர் அருகே அதிர்ச்சி: காய்கறி லாரியில் கடத்தல்…

image

சிதம்பரம் போலீசார் நேற்று (பிப்.2) பல்வேறு இடங்களில் வாகன சோதனை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த டூவீலர் ஒன்றை சோதனை செய்த போலீசார், அதில் குட்கா பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து டூவீலரில் வந்தவர்களிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், காய்கறி லாரியில் மறைத்து கடத்தப்பட்ட 260 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், 7 நபர்களை நேற்று கைது செய்தனர்.

News February 3, 2026

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (பிப்.02) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.03) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம்,விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!