India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவருமான தி. வேல்முருகன், இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டுக்கான சிறப்பு திட்டங்களோ, நிதி ஒதுக்கீடோ இல்லாத ஒன்றிய அரசின் 2024-25 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை; தமிழர்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என்று தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று பட்ஜெட் தாக்கல் செய்யும் போது தமிழ்நாடு என்கிற பெயரை ஒரு இடத்தில் கூட இடம்பெற செய்யாத ஒன்றிய பாஜக அரசை நிராகரிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
கடலூர் அருகே செம்மங்குப்பம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பெருமளவில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா இன்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கூடுதல் ஆட்சியர் சரண்யா உடனிருந்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியலை கட்சி தலைமை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, த.மா.க கடலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் மற்றும் சிதம்பரம் நகர தலைவராக செயல்பட்டு வந்த ரஜினிகாந்தை புதிய மாவட்ட தலைவராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5.27 கோடி மதிப்பீட்டிலான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இன்று (ஜூலை 23) கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பணிகளை தரமாகவும், விரைந்து செய்து முடிக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் மூலதன மானிய திட்ட நிதியின் கீழ் ரூ.4.98 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மாவட்ட ஆட்சயர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
ஓமன் நாட்டு கடற்பகுதியில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் கப்பல் மாலுமியாக பணியாற்றி வந்த கடலூர் முதுநகரை சேர்ந்த தனஞ்செயன் என்பவர் நீரில் மூழ்கி மாயமானார். அவரது நிலை குறித்து விரைந்து செயல்பட்டு மீட்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது மனைவி எழிலரசி வேண்டுகோளுக்கு இணங்க, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் இன்று கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் கோரிக்கை மனு அளித்தார்.
கடலூர் மாவட்ட ஆட்சியராக சிபி ஆதித்ய செந்தில்குமார் கடந்த 19ஆம் தேதி பொறுப்பேற்றார். இந்த நிலையில் கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் மனைவியும், ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான அனு ஐ.ஏ.எஸ், கடலூர் மாநகராட்சி ஆணையராக நேற்று நியமிக்கப்பட்டார். கடலூரில் கணவர் ஆட்சியராகவும், மனைவி மாநகராட்சி ஆணையராகவும் ஒரே இடத்தில் பணிபுரிவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு இன்று பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளது. மேலும் கடலூர் மாவட்டதில் சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கான சலுகைகள், புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல் போன்றவை மத்திய அரசு பட்ஜெட்டில் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் பட்ஜெட்டில் இடம் பெறுபவை குறித்து உங்கள் கருத்து?
கடலூர் மாவட்ட மாநகராட்சி ஆணையராக காந்திராஜ் பதவி வகித்து வந்த நிலையில், தற்போது கடலூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக அனு ஐஏஎஸ் அவர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதேபோல் தமிழ்நாட்டில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கடலூர் மாநகராட்சின் புதிய ஆணையர் அனு விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.
Sorry, no posts matched your criteria.