India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மக்களே, சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லை என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <

கடலூர் மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘90131 51515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் <

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

கடலூர் மாவட்டம்
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 20.02.2026 அன்று நடைபெறவுள்ளது
மாவட்ட என ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து பிப் 20 ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நெய்வேலி வட்டம் 25-ஐ சேர்ந்தவர் கோவிந்தராசு இவர் மகன் (13), இவர் தனியார் ஆண்கள் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் இவர், பள்ளி ஆய்வகத்தில் உள்ள பொருட்கள் உடைந்ததால், அவனது பெற்றோரை வரவழைத்து ஆசிரியர்கள் அஸ்வினை கண்டித்தனர். இதில் மனமுடைந்த சிறுவன் இன்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நெய்வேலி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் கடந்த 11.1.2026 அன்று கடவாச்சேரி மேம்பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்னர். அப்போது காரில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்தி வந்த 3 பேரை கைது செய்தனர். இந்நிலையில் இவர்களுக்கு பெங்களூரில் இருந்து புகையிலை பொருட்களை பார்சலில் அனுப்பி வைத்த பெங்களூருவை சேர்ந்த யூசுப்கான் என்ற முகமது யூசுப்பை(21) நேற்று போலீசார் பெங்களூரு சென்று கைது செய்தனர்.

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (20.2.2026) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும், இம்முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்படமாட்டாது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (பிப்.10) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.11) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம்,விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
1. கடலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04142-212660
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free: 1800 4252 441
4. சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5. உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை SHARE பண்ணுங்க.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த மத்திய அரசுக்கு துணை போகும் அதிமுகவை கண்ப்பதாக கூறி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வருகின்ற பிப்.12 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அவ்வகையில், விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, பண்ருட்டி சட்டமன்ற தொகுதிகளில் 23 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அமைச்சர் கணேசன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.