Cuddalore

News February 10, 2026

கடலூர்: செய்முறை தேர்வு; 30,550 மாணவர்கள் பங்கேற்பு

image

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நேற்று முதல் தொடங்கி வருகிற பிப்.14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அவ்வகையில், கடலூர் மாவட்டத்தில் 196 மையங்களில் 30,550 மாணவர்கள் தேர்வு எழுதினர். மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்ததாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

News February 10, 2026

கடலூர்: இனி வாட்ஸ்ஆப் மூலம் எல்லாம் செய்யலாம்!

image

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க

News February 10, 2026

ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி

image

கடலூர் மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்னப்பிக்க<> https://www.tahdco.com<<>> என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News February 10, 2026

கடலூர்: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News February 10, 2026

சிதம்பரம்: 50 பவுன் தங்க காசு மாலை வழங்கிய பக்தர்

image

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் சித்சபையில் வீற்றுள்ள சிவகாமி அம்மனுக்கு அணிவிக்க சென்னையை சேர்ந்த பக்தர் சுப்ரமணியன் என்பவர் சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 பவுன் தங்க காசு மாலையை பொது தீட்சிதர்களிடம் வழங்கினார். அதனை பெற்றுக் கொண்ட பொதுதீட்சிதர்கள் சிறப்பு பூஜை செய்து சிவகாம சுந்தரி அம்பாளுக்கு அணிவித்தனர்.

News February 10, 2026

கடலூர்: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

image

கடலூர் மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். <>இங்கே கிளிக்<<>> செய்து, சஞ்சார் சாத்தி என்ற இணையதளத்திற்கு செல்லவும். பின் அதில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு எளிதாக Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-ஐ டிரேஸ் செய்து, Easy-ஆக கண்டுபிடிக்கலாம். SHARE பண்ணுங்க!

News February 10, 2026

மோடி அரசின் துரோகத்தை வீழ்த்துவோம் – பண்ருட்டி MLA

image

‘பத்தாண்டுகாலக் கார்ப்பரேட் அடிமைத்தனம்., இந்தியாவின் வளங்களை அந்நிய நாடுகளுக்குத் தாரைவார்க்கும் மோடி அரசு! விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அமெரிக்காவிற்கு தாரைவார்க்காமல் மோடி அரசின் துரோகத்தை வீழ்த்துவோம்’ என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

News February 10, 2026

கடலூர்: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது!

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 10, 2026

கடலூர்: தகராறில் ஈடுபட்ட ரவுடி கைது

image

நெய்வேலி அடுத்த மேல் வடக்குத்து கிராமத்தை சேர்ந்தவர் நடேசன் மகன் வீரமணி(26). ரவுடியான இவர் மீது 20 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று அவர் வடக்குத்தில் வீச்சரிவாளுடன் நின்று கொண்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினார். மேலும் அந்த வழியாக வந்த பொதுமக்களிடம் வீச்சரிவாளை காட்டி மிரட்டினார். இது குறித்த நெய்வேலி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.

News February 10, 2026

கடலூர்: உயிரோடு புதைந்து பெண் பலி

image

நெல்லிக்குப்பம் அடுத்த சுந்தரவாண்டியை சேர்ந்தவர் கந்தசாமி மனைவி சாந்தி(55). இவர் நேற்று அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் ஏற்கனவே தோண்டப்பட்ட குழியில் இறங்கி வேலை செய்தபோது, திடீரென மண் சரிந்து சாந்தி மீது விழுந்ததில் அவர் உயிரோடு மண்ணில் புதைந்து உயிரிழந்தார். இது பற்றி அறிந்த சாந்தியின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!