India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூரில் செய்தியாளர்கள் அனைவரும் ஒன்று கூடி இன்று கடலூரில் உள்ள பிரஸ் கிளப் வளாகத்தில் பொங்கல் வைத்து பொங்கலை சிறப்பாக செய்தியாளர்கள் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சி.பி. ஆதித்ய செந்தில்குமார், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.

கடலூர் அரசு மருத்துவமனை எதிர்நோக்கினர் பகுதியை சேர்ந்த விஜயபாரதி என்பவரை அடையாளம் தெரியாத 4 நபர்கள் தாக்கியதாக கடலூர் புதுநகர்காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தேடிவந்த நிலையில், கடலூர் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் அதிரடி உத்தரவிட்டார். புதுநகர் எஸ்.ஐ.பிரசன்னா இவ்வழக்கில் சம்பந்தப்பட்டஆகாஷ், ஹரிஷ்குமார், விஜய கணேஷ் கைது செய்தும்16 வயது சிறுவர் ஒருவரை கையகப்படுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

போகி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் விழா நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஐ.பி.எஸ் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் ” அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் வருகிற 21, 22-ஆம் தேதிகளில் நடக்கிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வரும் 21 ஆம் தேதி காலை 9 மணி அளவில் திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் பள்ளியில் போட்டிகள் நடைபெறுகிறது. 3 பிரிவுகளில் தனித்தனியே முதல்பரிசு ரூ.10,000, 2வது பரிசு ரூ.7,000, 3வது பரிசு ரூ.5,000 என வழங்கப்பட உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் ஏற்கனவே உள்ள 8 சோதனை சாவடிகளுடன்,கூடுதலாக 84 தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதுதவிர பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் போலீசார் இருசக்கர வாகனங்களில் ரோந்துபணி மேற்கொள்ள உள்ளனர் என எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்தார்.

கடலூர்: பொங்கல் பண்டிகையின் போது பொது இடங்களில் கூடும் இளைஞர்கள் முன்பகையை காரணமாக தகராறு செய்யும் நபர்கள் மீதும், மதுபோதையில் தகராறு செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். தேவையில்லாத செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட முன்னாள் படைவீரர், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினருக்கென சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 24ஆம் தேதி மாலை 4 மணிக்கு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

கடலூரில் பாரம்பரியமாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் தென்பெண்ணை ஆற்றுத் திருவிழா இந்த ஆண்டும் வழக்கம் போல் வருகிற 18ஆம் தேதி நடத்தப்படும். தென்பெண்ணையாற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால், விழாவுக்கு வரும் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் விழா நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை செல்வோருக்கு வசதியாக சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் ராமநாதபுரத்தில் இருந்து, 19ஆம் தேதி மாலை 3:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு சென்னை, தாம்பரம் சென்றடையும். மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, சிதம்பரம், கடலூர் போர்ட், விழுப்புரம் வழியாக இந்த ரயில் செல்கிறது. இந்த சிறப்பு ரயிலில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.

சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற நடராஜர் கோயிலில் நாளை (ஜனவரி 13) ஆருத்ரா தரிசனம் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார். இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் நாளை செயல்படாது.
Sorry, no posts matched your criteria.