India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் – காட்டுமன்னார்கோயில் சாலையில் ஓட்டுநரின் கவனக்குறைவால்
நெய்வாசல் கிராமம் அருகே
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிதம்பரம் ரயிலடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இன்று 76 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.இதில் சிறப்பு விருந்தினராக நா.த.க. நிர்வாகியும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கடலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளருமான மணிவாசகம் என்பவர் தேசிய கொடியை ஏற்றி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றுகளை வழங்கியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் தேரடி தெருவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் ஆளுநர் ஆ.என் ரவி, இன்று சிதம்பரத்தில் நடைபெறும் அவரது பிறந்தநாள் விழா கூட்டத்திற்கு வருகை தருவதை அனைத்துக் கட்சிகள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். கருப்புக் கொடி காட்டப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நல்லாத்தூர், தொழுதூர், ஒரையூர், வெள்ளக்கரை உள்ளிட்ட பிற துணை மின் நிலையங்களில் நாளை (ஐன..28) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால, நல்லாத்தூர், கீழ்குமாரமங்கலம், புதுக்கடை, தூக்கணாம்பாக்கம், செல்லஞ்சேரி உள்ளிட்ட பிற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் நாட்டில் புகையின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது யாசின் மற்றும் முகமது ஜுனை ஆகியோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினம்தோறும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (26/01/2025) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் அமர்நாத், சிதம்பரம் காவல் ஆய்வாளர் கலையரசன், விருத்தாசலம் உதவி ஆய்வாளர் சிவகாமி, பண்ருட்டி உதவி ஆய்வாளர் எழில்தாசன் மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் அருகேசிலுவைபுரம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி குடியரசு நாளை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். ஊராட்சி தனி ஊராட்சியாக அறிவிக்கும் வரை பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தப் போவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் பூக்கடைக்காரர் அரவிந்த் (28). இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள சுடுகாடு அருகில் நடந்து சென்றபோது மர்மநபர் ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டார். இதுபற்றி அறிந்த டி.எஸ்.பி. ரூபன் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அரவிந்த் உடலை கைப்பற்றி, அவரை கொலை செய்த மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு கடலூர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து, விழா நடக்கும் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு சிறப்பு பேருந்துகளை இன்று (ஜன.26) காலை 6.30 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை கடலூர் போக்குவரத்து துறை அதிகாரிகள் இயக்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

குடியரசு தின விழா நாளை (ஜனவரி 26 ஆம் தேதி) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 கிராமங்களிலும், கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டும். மேலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் இடம், நேரம் குறித்து முன்கூட்டியே பொது மக்களுக்கு அந்தந்த ஊராட்சி செயலாளர்கள் அறிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.