Cuddalore

News April 14, 2024

கடலூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் ரேவதி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் கல்பனா, விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் சந்திரசேகரன், நெய்வேலி காவல் ஆய்வாளர் சுமதி மற்றும் பண்ருட்டியில் காவல் ஆய்வாளர் சீனுவாசன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 14, 2024

கடலூரில் நாளை பொதுக்கூட்டம்

image

கடலூர் மாவட்டத்தில் வரும் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நாளை (16/04/2024) இரவு 7 மணிக்கு கடலூர், மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் அக்கட்சியின் தலைவர் சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 14, 2024

கடலூரில் நாளை முதல் அமல்

image

தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலாக உள்ளதால், மீன்களின் விலை உயர வாய்ப்புள்ளது. மீன்கள் இனப்பெருக்கத்திற்காக நாளை முதல் 61 நாள்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த காலக்கட்டத்தில் விசைப் படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல மாட்டார்கள். இதனால் மீன்களின் வரத்து குறையும் என்பதால் வஞ்சிரம், கடம்பா போன்ற மீன்களின் விலை கணிசமாக உயரலாம் என மீனவர்கள் கூறியுள்ளனர்.

News April 14, 2024

சிதம்பரத்தில் போக்சோவில் வாலிபர் கைது

image

சிதம்பரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கிள்ளையை சேர்ந்த 21 வயது வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் தற்போது அந்த சிறுமி 5 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். இதைப் பற்றி தகவல் அறிந்த அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பூவழகி தலைமையில் நேற்று விசாரணை நடத்தி வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

News April 14, 2024

பாட்டிலில் பெட்ரோல் வழங்க தடை

image

நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடலூரில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி தேர்தல் முடியும் வரை பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கடலூர் பெட்ரோல் பங்குகளில் போலீஸார் சார்பில் இதற்கான அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

News April 13, 2024

கடலூரில் விழிப்புணர்வு நடைபயணம்

image

பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கடலூர் டவுன்ஹால் அருகே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 100% வாக்களிப்பது குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்
வகையில் விழிப்புணர்வு நடைபயணத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் இன்று கொடியசைத்து தொடக்கிவைத்தார். உடன் கடலூர் எஸ்.பி, மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

News April 13, 2024

கடலூர்: ஏப்ரல் 16 துவக்கம்

image

கடலூர், மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டரங்கில் நவீன வசதிகளுடன் இயங்கி வரும் நீச்சல் குளத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கோடைக்கால முதல் கட்ட நீச்சல் பயிற்சி வகுப்புகள் கடந்த 2-ம் தேதி தொடங்கிய நிலையில் நாளையுடன் முடிகிறது. இந்நிலையில் 2-ம் கட்ட நீச்சல் வகுப்பு வரும் 16ம் தேதி முதல் 28ம் தேதிவரை நடைபெற உள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்துள்ளாா்.

News April 13, 2024

கடலூர்: முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் இயங்கும் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு வாக்களிக்க ஏதுவாக ஏப்ரல் 19ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களுக்கு வாக்குரிமை உள்ள தொகுதியில் ஓட்டுப்பதிவு நடக்கும் நாளன்று வாக்களிக்க வசதியாக சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் அளிக்க வேண்டும் என நேற்று தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

News April 13, 2024

கடலூரில் மூன்றாம் கட்ட பயிற்சி

image

கடலூர் புனித வளனார் பள்ளியில் கடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 227 வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்த பயிற்சி கூட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாள்வது மற்றும் வாக்குச்சீட்டு முறைகளை கையாள்வது போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது இதில் 2000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

News April 13, 2024

பாம்பு கடித்து பாம்பு பிடி தன்னார்வலர் உயிரிழந்த சோகம்

image

கடலூர் மாவட்டத்தில் தீயணைப்புத்துறையினர், வீடு ஒன்றில் பாம்பு நுழைந்திருப்பதாக கிடைத்த தகவலில் சென்று பாம்பு பிடித்துள்ளனர். அதனை பாம்பு பிடி தன்னார்வலர் உமர் அலி (36) வனப்பகுதிக்குள் விடுவதற்காக டப்பாவில் அடைக்க முற்பட்டார். அப்போது பிடிபட்ட பாம்பு உமர் அலியை கடித்துள்ளது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.